தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) கீழ் வழங்கப்படும் இடைக்கால மாதாந்திர ஓய்வூதியத் தொகை (Interim Monthly Payout) தொடர்பாக நிதித்துறை புதிய தெளிவுரைக் கடிதத்தை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 18 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு நிலையான தொகையாக ரூ.10,000/- மட்டுமே வழங்க வேண்டும் மற்றும் ஏற்கனவே கூடுதலாக வழங்கப்பட்ட தொகையினை பிடித்தம் (Recovery) செய்ய வேண்டும் என கடந்த 11.09.2026 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தின் பத்தி 3(i) மற்றும் 3(iv) ஆகியவை தற்போது முழுமையாகத் திரும்பப் பெறப்படுவதாக (Withdrawn) அரசு அறிவித்துள்ளது.
மாற்றங்கள் என்னென்ன? (முந்தைய நிலை vs தற்போதைய நிலை)
அரசு கடிதத்தின் முக்கிய அம்சங்கள் (Letter No. 14190711/TAPS/2026-5):
- சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது: 11.09.2026 நாளிட்ட கடிதத்தில் 18 ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் கொண்டவர்களுக்கு ரூ.10,000/- மட்டும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட பத்தி 3(i) முழுமையாகத் திரும்பப் பெறப்படுகிறது.
- பிடித்தம் உடனடியாக நிறுத்தம்: ஓய்வூதியதாரர்களிடம் இருந்து கூடுதல் தொகையை 10 தவணைகளில் பிடித்தம் (Recovery) செய்யத் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- 30% + DA இடைக்காலத் தொகை தொடரும்: 01.01.2026 முதல் 10 ஆண்டுகளுக்குக் குறையாத பணிக்காலம் முடித்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, அவர்களின் கடைசி அடிப்படை ஊதியத்தில் 30% அல்லது ரூ. 10,000/- (எது அதிகமோ அது) மற்றும் அதற்கான அகவிலைப்படி (DA) தொடர்ந்து வழங்கப்படும்.
- எதிர்காலச் சரிசெய்தல்: TAPS விதிமுறைகளின்படி இறுதித் தொகை நிர்ணயிக்கப்படும் போது, இடைக்காலத் தொகைக்கும் அதற்குமான வேறுபாடுகள் எதிர்காலத்தில் சரிசெய்யப்படும்.
TAPS அதிகாரப்பூர்வ கடித நகல் (PDF)
அரசு முதன்மைச் செயலாளர் திரு. V. அருண் ராய், இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்ட கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய:
DOWNLOAD TAPS CLARIFICATION GO PDF
0 Comments