பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மறுபணி நியமனக் காலத்தில் இனி சம்பளத்தில் 20% CPS பிடித்தம் கிடையாது!

Teachers Happy News மறுபணி நியமன ஆசிரியர்களுக்கு 20% CPS பிடித்தம் ரத்து!
நிதித்துறை விளக்கம்

பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மறுபணி நியமனக் காலத்தில் இனி சம்பளத்தில் 20% பிடித்தம் கிடையாது!

ஆசிரியர்கள் கடைசியாகப் பெற்ற முழு ஊதியத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவிப்பு

அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெற்றாலும், மாணவர்களின் நலன் கருதி அந்த கல்வியாண்டின் இறுதி வரை மறுபணி நியமன (Re-employment) அடிப்படையில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர்.

2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் கொண்டுவரப்பட்டனர். இவர்களுக்கு ஓய்வுக்குப் பின் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பது போல் ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் மறுநியமனக் காலத்தில் இவர்களது ஊதியம் வழங்குவதில் சில சிக்கல்கள் நிலவி வந்தன.

20% பிடித்தம் ரத்து
ஊதியத்தில் செய்யப்பட்ட CPS பிடித்தம் இனி இல்லை
முழு ஊதியம்
கடைசியாகப் பெற்ற 100% ஊதியம் வழங்கப்படும்
தொகை வாபஸ்
ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் திரும்பத் தரப்படும்

நிதித்துறையின் முக்கியத் தெளிவுரை விவரங்கள்:

பிரச்சனை என்ன? CPS திட்டத்தில் மறு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, மறு நியமனப் பணிக் காலத்தில் 20% ஊதியம் (பணியாளர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு) பிடித்தம் செய்யப்பட்டு, மீதமுள்ள 80% சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இதை கருவூலக் கணக்குத் துறைக்கும், நிதித் துறையின் கவனத்திற்கும் ஆசிரியர் சங்கத்தினர் கொண்டு சென்றனர். இதன் அடிப்படையில், கருவூலக் கணக்குத்துறை ஆணையர் நிதித்துறையிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தார்.

அரசு எடுத்துள்ள புதிய முடிவுகள்:

  • 20% CPS பிடித்தம் ரத்து: மறுபணி நியமனக் காலத்தில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் பணியாளர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு உள்ளிட்ட 20% CPS தொகையைப் பிடித்தம் செய்யத் தேவையில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • ஒப்பந்த அடிப்படையிலான ஊதியம்: மறுநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான ஊதியத்தை இனி ‘ஒப்பந்த அடிப்படையிலான கணக்குத் தலைப்பின்’ (Contract Basis Head of Account) கீழ் பெற்று வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
  • பிடித்தம் செய்யப்பட்ட தொகை திருப்பித் தரப்படும்: ஏற்கனவே மறுபணியில் உள்ள ஆசிரியர்களிடம் ஊதியப் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் ஊதியம் பெற்ற கணக்குத் தலைப்பின் கீழ் அந்த வித்தியாசத் தொகை மீண்டும் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

⏳ தற்காலிக தளர்வு: ஒப்பந்த ஊதியத் தலைப்பில் நிதி ஒதுக்கீடு இல்லாத பட்சத்தில், ஆசிரியர்களின் ஊதியத்தை 30.09.2026 வரை வழக்கமான ஊதியத் தலைப்பின் கீழேயே பெற்று வழங்க கருவூலங்களுக்குத் தற்காலிக விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது!

Post a Comment

0 Comments