தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS 2026) அரசாணை (G.O.Ms.No.122 & 123) மூலம் மாற்றியமைக்கப்பட்டு, 01 ஜூலை 2026 முதல் 30 ஜூன் 2031 வரையிலான 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் (United India Insurance) வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.
💳 காப்பீட்டு வரம்பு & மாதச் சந்தா விவரங்கள்
பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் ரொக்கமில்லா (Cashless) சிகிச்சையாக ரூ. 7.50 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. கடுமையான நோய்களுக்கு ரூ. 12 லட்சமாகவும், சிறப்பு நிதியுததியுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ. 27 லட்சம் வரை காப்பீட்டுப் பலன்களைப் பெறலாம். மாதச் சந்தா ரூ. 390 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
📌 திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் & வழிகாட்டுதல்கள்:
அடிப்படை மருத்துவ வரம்பு
நெட்வொர்க் மருத்துவமனைகளில் ரொக்கமில்லா (Cashless) முறையில் ரூ. 7.50 லட்சம் வரை காப்பீட்டுச் சிகிச்சை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நோய்களுக்கான வரம்பு
மிகக் கடுமையான மற்றும் குறிப்பிட்ட சில உயர்தர சிகிச்சைகளுக்குக் காப்பீட்டு வரம்பு ரூ. 12 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
Corpus Fund & மாதச் சந்தா
சிறப்பு நிதியுததியுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ. 27 லட்சம் வரை பலன் பெறலாம். ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதச் சந்தா ரூ. 390 (காப்பீடு ரூ. 375 + சிறப்பு நிதி ரூ. 15) பிடித்தம் செய்யப்படும்.
மின்-அடையாள அட்டை (e-ID Card)
தகுதியான பயனாளிகளுக்கு அவர்களின் IFHRMS ஐடி விபரங்களின் அடிப்படையில் டிஜிட்டல் முறையில் ஈ-கார்டு (e-Card) வழங்கப்படும்.
முக்கிய நிபந்தனைகள்
திருமணமான அரசு ஊழியர்களின் பெற்றோரை இத்திட்டத்தில் சேர்க்க இயலாது. அவசரக் காலங்களில் Non-Network மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் 60% வரை மட்டுமே ரீஇம்பர்ஸ்மென்ட் பெற முடியும்.
0 Comments