இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant பணிக்கு 250 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Any Degree படித்தவர்கள், கணினியில் குறைந்தபட்சம் 35 w.p.m. ஆங்கில தட்டச்சு வேகம் கொண்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 07.10.2026 முதல் 28.10.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
📅 முக்கிய தேதிகள் & ஊதிய விவரங்கள்
ஆரம்ப நாள்: 07.10.2026 | கடைசி நாள்: 28.10.2026
மாத ஊதியம்: Rs.35,400/- | காலியிடங்கள்: 250 Posts
📌 தகுதி மற்றும் விவரங்கள்:
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Bachelor’s Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி இயக்கம் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு குறைந்தபட்சம் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அவசியம்.
வயது வரம்பு & தளர்வுகள்
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி SC/ST-க்கு 5 ஆண்டுகள், OBC-க்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வயதுத் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பக் கட்டணம்
General / OBC பிரிவினருக்கு ரூ. 1000/- மற்றும் ST / SC / Ex-s / PWD பிரிவினருக்கு ரூ. 750/- ஆன்லைன் மூலம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு (Objective Type Test), கணினி தட்டச்சுத் தேர்வு (Typing Test), விவரிப்பு முறை எழுத்துத் தேர்வு (Descriptive) மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
0 Comments