சிறப்பு டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் பணிச்சான்று - ஆசிரியர்கள் அதிருப்தி

Special TET Exam Service Certificate New Requirement Teachers Frustration Tamil Nadu TRB
Special TET Update 2026

சிறப்பு டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் பணிச்சான்று - ஆசிரியர்கள் அதிருப்தி

சிறப்பு டெட் தேர்வில் தோல்வியடைந்த ஆசிரியர்களுக்கு மீண்டும் புதிய பணிச்சான்று கேட்பதால் எழுந்துள்ள குழப்பம் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்த விரிவான செய்தி

சிறப்பு டெட் தேர்வில் தோல்வியடைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணிச்சான்று கேட்பதால் அவர்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். பழைய பணிச்சான்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் சிறப்பு டெட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. அக்டோபர் 12-ல் வெளியான முடிவுகளில், 2.17 லட்சம் பேரில் 1.10 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை.

📋 அடுத்தகட்ட தேர்வு & விண்ணப்ப விவரங்கள்:

மறுதேர்வு தேதி: டிசம்பர் 20, 2026 (காலை தாள்-2, பிற்பகல் தாள்-1)
ஆன்லைன் விண்ணப்பக் காலம்: அக்டோபர் 27 முதல் நவம்பர் 19, 2026 வரை.
சிக்கல்: விண்ணப்பிக்கும்போது மீண்டும் புதிதாகப் பணிச்சான்று பெற்று பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

⚠️ ஆசிரியர் சங்கத் தலைவரின் கருத்து & கோரிக்கைகள்:

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் வி.கணேசன் கூறியதாவது:
1. "புதிதாகப் பணிச்சான்று பெற வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஜூலையில் நடந்த சிறப்பு டெட் தேர்வுக்குப் பெற்ற பணிச்சான்றையே மீண்டும் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்."
2. "மேலும், டெட் தேர்வில் தமிழாசிரியர் தமிழ்ப்பாடத்தைத் தவிர வேறு பாடம் நடத்தக்கூடாது என விதியிருக்கும்போது, தமிழ்ப்பாட ஆசிரியர் சமூக அறிவியல் பாடத்திலிருந்து 60 மதிப்பெண்ணுக்கு ஏன் தேர்வு எழுத வேண்டும்? அதனைத் தவிர்த்துவிட்டு தமிழ்ப்பாடத்தில் 30 மதிப்பெண் என்பதை 60 மதிப்பெண் எனத் திருத்தலாம். அதேபோல் ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கும் அவர்களது பாடங்களில் கூடுதல் மதிப்பெண் வைத்து தேர்வு நடத்தினால் எளிதில் தேர்ச்சி பெறுவர். இதனை ஆசிரியர் தேர்வு வாரியமும் தமிழக அரசும் பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

📌 ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகள்:

📑

பணிச்சான்று விலக்கு அளிக்க கோரிக்கை

புதிதாகப் பணிச்சான்று பெற அலைய வேண்டியிருப்பதாலும், காலதாமதம் ஏற்படுவதாலும் ஜூலை மாதத் தேர்வுக்குப் பயன்படுத்திய பழைய பணிச்சான்றையே இந்த முறை ஏற்றுக்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும்.

📱 Download Tamilaruvi App for Special TET & Teacher Updates

Post a Comment

0 Comments