TNPSC - குரூப் 1 முதல் நிலைத் தேர்வு: பழைய பாதை, பழைய பாணி!

TNPSC Group 1 Prelims Exam Analysis Old Style
TNPSC Exam Review 2026

TNPSC - குரூப் 1 முதல் நிலைத் தேர்வு: பழைய பாதை, பழைய பாணி! - திறனாய்வு அறிக்கை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வினாத்தாள் குறித்த விரிவான பார்வை மற்றும் திறனாய்வு

எப்போதும் போல, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சிறந்த முறையில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வை நடத்தி முடித்துள்ளது. அநேகமாக எங்கும் யாரும் குறை கூற முடியாத அளவுக்கு நன்கு திறம்பட நடத்தியுள்ள தேர்வாணையம் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துகள்.

எடுத்த எடுப்பிலேயே ஓர் உண்மையைச் சொல்லித்தാൻ ஆக வேண்டும் - குரூப் 1 முதல் நிலை தேர்வு வினாத்தாள், மன்னிக்கவும், மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. சர்வதே நடப்புகள் முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டது, அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறிப்பிட்ட அளவில் இடம் பெறாதது, பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் புறக்கணிக்கப்பட்டது என இது குரூப் 1க்கான தேர்வு என்று ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

⚠️ வினாத்தாள் தரம் மற்றும் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்

பெரும்பாலான கேள்விகள் எப்போதோ தயாரிக்கப்பட்டது போல் உள்ளது. மொழிபெயர்ப்பு மிகவும் அயற்சி தருவதாகவும், எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

📌 தேர்வின் முக்கிய பகுப்பாய்வு விவரங்கள்:

📚

வழக்கமான பாரம்பரியப் பகுதிகள்

இந்திய அரசியலமைப்பு சட்டம், மத்திய மாநில அரசுத் திட்டங்கள், இந்திய வரலாறு, தமிழக அரசியல், தமிழ் இலக்கியப் பகுதிகள் ஆகியவை வழக்கம் போல் கணிசமான அளவில் இடம் பெற்று பழைய தேர்வர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளன.

🔍

மொழிபெயர்ப்புச் சிக்கல்

'டிஜிட்டல் உலர் தாவரத் தொகுப்​புத் தரவுத் தளங்கள்' போன்ற புரிந்துகொள்ளக் கடினமான மொழிபெயர்ப்புகளும், ஆங்கிலச் சொற்களை அப்படியே எழுதும் முறையும் தேர்வாணையம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.

⭐

வரவேற்கத்தக்க வினாக்கள்

இயற்கை வேளாண்மை, நானோ யூரியா, அரசியலமைப்பு திருத்தங்கள், லோக்பால், நாசா ஆய்வகம், பொருநை அகழாய்வு மற்றும் வேலூர் கிளர்ச்சி தொடர்பான வினாக்கள் மெச்சும் படி இருந்தன.

📱 Download Tamilaruvi App for TNPSC & Competitive Exam Updates

Post a Comment

0 Comments