பணியாளர் வருங்கால வைப்பு நிதி (PF) திட்டத்தில் கட்டாயமாக சேர்வதற்கான மாதாந்திர அடிப்படை சம்பள வரம்பைத் தற்போதைய 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுகுறித்துக் கூறியதாவது: விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பணியாற்றும் தொழிலாளர்களுக்காகப் பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்பு 2014-ல் நிர்ணயிக்கப்பட்ட ரூ.15,000 சம்பள வரம்பு தற்போது ரூ.25,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 51 லட்சம் பணியாளர்கள் பலன்பெறுவார்கள்; அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.11,339 கோடி கூடுதலாகச் செலவாகும். நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் நிறைவடைந்த பிறகு புதிய விதிமுறை அமலுக்கு வரும்.
📌 PF ஊதிய உச்சவரம்பு உயர்வு முக்கிய அம்சங்கள்:
📈 சம்பள வரம்பு உயர்வு
மாதாந்திர அடிப்படைச் சம்பள வரம்பு Rs.15,000-லிருந்து Rs.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
👥 பயனடையும் பணியாளர்கள்
புதிய விதியால் நாடு முழுவதும் உள்ள சுமார் 51 லட்சம் பணியாளர்கள் நேரடியாகப் பலன் பெறுவார்கள்.
💰 மாதாந்திர பங்களிப்பு
சம்பள வரம்பு ரூ.25,000 ஆக உயரும்போது, பணியாளர் மற்றும் நிறுவனத்தின் பி.எப். பங்களிப்பு ரூ.3,000-மாக அதிகரித்து நீண்டகாலச் சமூக பாதுகாப்பு வலுப்பெறும்.
🏛️ அரசின் கூடுதல் செலவு
இந்தத் திட்டத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் தோராயமாக ரூ.11,339 கோடி கூடுதல் செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments