காலை உணவு திட்டம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள DEE உத்தரவு.

Block Education Officers Home District Working Rules Tamil Nadu
DEE & Breakfast Scheme Update 2026

காலை உணவு திட்டம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள DEE உத்தரவு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் மற்றும் பள்ளிகளில் உணவு தரத்தை உறுதி செய்ய சுழற்சி முறை கண்காணிப்பு குறித்து தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 22.09.2026 முதல் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

🥣 தலைமை ஆசிரியர்கள் & ஆசிரியர்களுக்கான கண்காணிப்பு வழிகாட்டுதல்கள்

மாணவர்களுக்கு உணவு பரிமாறுதல் பணியைத் தினமும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் தீவிரமாகக் கண்காணித்து வர வேண்டும் எனத் தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

📌 பின்பற்ற வேண்டிய முக்கிய அறிவுறுத்தல்கள்:

🧹

சமையலறை தூய்மைப் பராமரிப்பு

சமையலறையில் சமையல் செய்யும் பொருட்கள் தவிர பிற பொருட்கள் வைப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். புகை, தூசி, நூலாம்படை இல்லாமல் எப்போதுமே தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

✨

பாத்திரங்கள் தூய்மை & பாதுகாப்பு

சமையல் செய்யும் பாத்திரங்கள் மற்றும் பரிமாறும் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் நன்கு சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருட்களை மூடிப் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும்.

🛡️

தரக்கட்டுப்பாடு & சுழற்சி முறை கண்காணிப்பு

சமைத்த உணவை மாணவர்களுக்குப் பரிமாறுவதற்கு முன்னர் அவ்வுணவு அவர்களின் உடல்நலத்திற்கு உகந்த தரமான உணவுதான் என்பதை ஆசிரியர்கள் உறுதிசெய்த பின்னரே வழங்க வேண்டும். இப்பணியைத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும்.

Breakfast Scheme Monitoring Order Notice Image
📱 Download Tamilaruvi App for School & Education Updates

Post a Comment

0 Comments