காலை உணவுத் திட்டம் தொடர்பான சுற்றறிக்கைக்குக் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் இன்னசென்ட் திவ்யா அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பின்னாள் தவெக அரசு இத்திட்டத்தை 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்வதாக அறிவித்ததுடன், திட்டத்தின் பெயர் ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனவும் மாற்றம் செய்யப்பட்டது. நடப்பு மாத இறுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் பெயர் பலகை வைக்கவும், சமையலறை, குடிநீர் உள்ளிட்ட குறைபாடுகளைத் தலைமை ஆசிரியர்கள் சொந்த நிதியில் நிவர்த்தி செய்யவும் கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
📌 துறைச் செயலாளரின் விளக்கத்தின் முக்கிய அம்சங்கள்:
⚠️ சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு
பள்ளிகளின் பராமரிப்புச் செலவுகளை ஆசிரியர்கள் சொந்த நிதியில் மேற்கொள்ள வேண்டும் என வெளிவந்த சுற்றறிக்கைக்கு ஆசிரியர்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
⚖️ ஒழுங்கு நடவடிக்கை அறிவுறுத்தல்
பள்ளிக்கல்வி அமைச்சரின் அறிவுரையின்பேரில், கடலூர் மாவட்டம் சார்பில் கவனக்குறைவாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🏛️ உள்ளாட்சி நிதி ஒதுக்கீடு
காலை உணவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் சேர்ந்து பள்ளிகளுக்குத் தேவையான தட்டுகள், டம்ளர்கள் மற்றும் சிறிய பராமரிப்புப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும் என கடந்த செப். 3-ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments