மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர் கடிதம்

Census Duty Date Extension Thanjavur District Collector Letter
Census Duty Date Extension 2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நீட்டிப்பு - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கடிதம் & உத்தரவு!

தஞ்சாவூர் மாவட்டம் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணிகளை முடிக்க செப்டம்பர் 5-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

தஞ்சாவூர் மாவட்ட முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 2027-ம் ஆண்டிற்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்ட கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது அப்பணியை முழுமையாக முடித்திட செப்டம்பர் 5-ம் தேதி வரை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை முடிக்காத ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அளித்து, அப்பணியை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வண்ணம் விரைந்து முடித்திட அறிவுறுத்துமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

📌 முக்கிய அறிவிப்பு விவரங்கள்:

📍 மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு.

🗓️ கால நீட்டிப்பு

முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை முடிக்க செப்டம்பர் 5-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

🏫 தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

கணக்கெடுப்புப் பணியை முடிக்காத ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கி, எந்தவிதப் புகாருமின்றி பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Census Duty Extension Official Circular Document Thanjavur
📱 Download Tamilaruvi App for Census & Teacher Updates

Post a Comment

0 Comments