பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கான பராமரிப்பு பணிகளை உள்ளாட்சி நிதியிலிருந்து மேற்கொள்ள உத்தரவு

Kamaraj Breakfast Scheme School Maintenance Local Fund Order Tamil Nadu
Kamaraj Breakfast Scheme Update

பள்ளிகளில் காலை உணவு திட்டத்துக்கான பராமரிப்பு பணிகளை உள்ளாட்சி நிதியிலிருந்து மேற்கொள்ள உத்தரவு!

காலை உணவுத் திட்ட பராமரிப்புப் பணிகளுக்குத் தலைமை ஆசிரியர்கள் சொந்த நிதி பயன்படுத்தக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் விளக்கம்

காலை உணவுத் திட்டத்துக்கான பராமரிப்புப் பணிகளை உள்ளாட்சி நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் தவெக அரசு, இத்திட்டத்தை 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்வதாக அறிவித்ததுடன், திட்டத்தின் பெயர் ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

📌 முக்கிய விவரங்கள் & துறை ரீதியான நடவடிக்கை:

🏫 பெயர்ப் பலகை உத்தரவு

பள்ளிகளில் 'காமராஜர் காலை உணவுத் திட்டம்' என்ற பெயர்ப் பலகையை இடம்பெறச் செய்யவும், அது குறித்த விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

⚠️ ஆசிரியர்களின் எதிர்ப்பு

கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி, சமையலறை, குடிநீர் போன்ற குறைபாடுகளைத் தலைமை ஆசிரியர்கள் சொந்த நிதியில் நிவர்த்தி செய்யக் கேட்டதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

🏛️ உள்ளாட்சி நிதி ஒதுக்கீடு

பள்ளிகளுக்குத் தேவையான தட்டுகள், டம்ளர்கள் மற்றும் சிறிய பராமரிப்புப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் நிதியில் இருந்து மேற்கொள்ள கடந்த செப்டம்பர் 3-ம் தேதி மாவட்ட ஆட்சியரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

⚖️ துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை

பள்ளிக்கல்வி அமைச்சரின் அறிவுரையின்பேரில், கடலூர் மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பாக கவனக்குறைவாகச் செயல்பட்ட பணியாளர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

📱 Download Tamilaruvi App for School & Government Updates

Post a Comment

0 Comments