விழா முன்பணம் சார்ந்த தகவல்...

Deepavali Festival Advance Government Employees Tamil Nadu Kalanjiyam App
Deepavali Festival Advance 2026

விழா முன்பணம் சார்ந்த முக்கியத் தகவல்...

அரசு ஊழியர்களுக்கான தீபாவளி விழா முன்பணம் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி குறித்த அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம். தீபாவளி விழா முன்பணம் சென்ற ஆண்டு பெற்றமைக்கு உரிய பிடித்தம் கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவு பெற்று விட்டது.

இந்த ஆண்டு, விழா முன்பணம் பெறத் தகுதியானவர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

📌 தகுதி & விண்ணப்பிக்கும் முறைகள்:

🎯 யாருக்குத் தகுதி?

இந்த ஆண்டு விழா முன்பணம் பெற 2027 டிசம்பர் 31 ஆம் தேதி அன்று அல்லது அதற்குப் பின்னர் பணிநிறைவு (Retirement) பெறுபவர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

📅 விண்ணப்பிக்கக் கால அவகாசம்

மேற்கண்ட தகுதி உடையவர்கள் செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

📱 ஆன்லைன் விண்ணப்ப முறை

அவரவர் மொபைல் மூலம் களஞ்சியம் App (Kalanjiyam App) வழியாக ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய வழியில் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

📱 Download Tamilaruvi App for Government & Employee Updates

Post a Comment

0 Comments