உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மதிப்பீடு தேர்வு (Assessment) நடைபெறுதல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

Higher Education Guidance Teachers Assessment Guidelines Tamil Nadu Model Schools
Higher Education Assessment 2026-27

உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மதிப்பீடு தேர்வு (Assessment) நடைபெறுதல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள் மற்றும் EMIS இணையதளம் வழியாக மதிப்பீட்டுத் தேர்வு மேற்கொள்ளும் முறை

உயர்கல்வி வழிகாட்டித் திட்டம் - 2026-2027 ஆம் கல்வியாண்டில் பயிற்சி பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மதிப்பீடு தேர்வு (Assessment) நடைபெறுவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளைத் தமிழ் நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக மாவட்ட அளவில் பயிற்சிப் பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்த ஆசிரியர்களால் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வில் பங்குபெற முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, மாவட்ட அளவில் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள், சார்ந்த பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் பள்ளி அளவில் பயிற்சி வழங்குவதால், இம்மதிப்பீட்டுத் தேர்வினை மாவட்ட மற்றும் பள்ளி அளவில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் 21.09.2026 முதல் 30.09.2026 வரை EMIS இணையதளத்தில் தவறாது மேற்கொள்ள வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📌 மதிப்பீடு தேர்வு முக்கிய விவரங்கள்:

📅 தேர்வு நடைபெறும் காலம்

மதிப்பீட்டுத் தேர்வை 21.09.2026 முதல் 30.09.2026 வரை EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள் தவறாமல் முடிக்க வேண்டும்.

👥 பங்கேற்கும் ஆசிரியர்கள்

மாவட்ட மற்றும் பள்ளி அளவில் உயர்கல்வி வழிகாட்டிப் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் இத்தேர்வில் பங்குபெறத் தகுதியுடையவர்கள்.

🌐 ஆன்லைன் தளம்

அதிகாரப்பூர்வ EMIS தேர்வுப் portal வழியாகத் தேர்வினை வெற்றிகரமாக மேற்கொள்ளலாம்.

📥 தேர்வு முகவரி & சுற்றறிக்கை பதிவிறக்கம்:

🌐 EMIS Exam Portal & CEO Letter PDF

தேர்வு எழுத EMIS போர்ட்டல் லாகின் மற்றும் CEO செயல்முறை கடிதத்தைப் பதிவிறக்கம் செய்யக் கீழே உள்ள பொத்தான்களைப் பயன்படுத்தவும்

📱 Download Tamilaruvi App for Higher Education & Teacher Updates

Post a Comment

0 Comments