காலாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு: நாளை முதல் அக்.4 வரை விடுமுறை

Quarterly Exam Ends Today Holidays Announcement Tamil Nadu
School Education Update 2026

காலாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு: நாளை முதல் அக்.4 வரை விடுமுறை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் Latha மற்றும் தொடக்கக்கல்வித் துறை இயக்குநர் Po.A. Naresh ஆகியோர் வெளியிட்ட காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் பள்ளி திறக்கும் நாள் அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான முதல் பருவ மற்றும் காலாண்டுத் தேர்வு கடந்த செப்டம்பர் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வுகள் இன்றுடன் (செப்டம்பர் 25) நிறைவு பெறுகின்றன.

இததைத் தொடர்ந்து மாணவர்களுக்குச் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 5-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🚫 சிறப்பு வகுப்புகளுக்குத் தடை & மழைக்கால பாதுகாப்பு

காலாண்டு விடுமுறை நாட்களில் எவ்விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என்றும், மாணவர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை நாட்கள் மழைக்காலமாக இருப்பதால் பாதுகாப்பு சார்ந்த அறிவுறுத்தல்களைத் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

📌 முக்கிய அறிவிப்பு விவரங்கள்:

📅

விடுமுறை நாட்கள்

செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் அக்டோபர் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

🎒

விஜயதசமி முதலாம் வகுப்பு சேர்க்கை

விஜயதசமி நாளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

⚠️

கண்காணிப்பு & பாதுகாப்பு

விடுமுறை காலத்தில் சிறப்பு வகுப்புகள் மற்றும் சுற்றுலாவிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வழியாகப் பள்ளிகளுக்குப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Quarterly Exam Holiday Announcement Circular Notice Image
📱 Download Tamilaruvi App for School & Education Updates

Post a Comment

0 Comments