தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, கோவை, திருச்சி மண்டலங்களில் தொழில் பழகுநர் (Apprentice) பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மொத்தம் 4,308 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரயில்வே துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
📌 தகுதி & முக்கிய விபரங்கள்:
🎓 கல்வித் தகுதி
ITI / 10th / 12th: Fitter, Turner, Welder, Electrician, Wireman, PASSA மற்றும் MLT (Radiology/Pathology/Cardiology) உள்ளிட்ட பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
🎂 வயது வரம்பு
15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டும் வயது தளர்வு உண்டு.
💵 ஊக்கத்தொகை & கட்டணம்
Stipend: ரூ.8,200 - ரூ.9,600 வரை வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 (SC, ST, PwBD மற்றும் பெண்களுக்குக் கட்டணம் இல்லை).
🗓️ கடைசி நாள்
இணையவழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: செப்டம்பர் 27, 2026 ஆகும்.
📋 பணியிடங்களின் விவரம்:
Fitter, Turner, Welder, Advanced Welder, Painter, Electronic Mechanic, Motor Vehicle Mechanic, Carpenter, Machinist, Electrician, Wireman, AC Mechanic, Diesel Mechanic, Trimmer, PASSA, Plumber, Draughtsman (Civil) மற்றும் மருத்துவப் பிரிவான MLT (Radiology, Pathology, Cardiology) ஆகிய பதவிகள் நிரப்பப்படுகின்றன.
🔗 ஆன்லைனில் விண்ணப்பிக்க (Official Link):
🌐 Southern Railway Online Application Portal
தெற்கு ரயில்வே பயிற்சிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்
Click Here to Apply Online
0 Comments