396 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்

State Teachers Award 396 Teachers Dr Radhakrishnan Award Minister Rajmohan Chennai Anna Centenary Library
State Teachers Day Award 2026

396 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடைபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வாழ்த்துகள்

மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, மாநில அளவில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

அதன்படி நடப்பாண்டில் 396 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பி.சந்தரமோகன் தலைமை வகிக்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

📌 விருது வழங்கும் விழா முக்கிய அம்சங்கள்:

🏆 விருது விவரம்

மாநில நல்லாசிரியர் விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

👥 பயனடைந்தோர்

நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் இருந்து தகுதியான 396 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

📜 அமைச்சர் உரை

புதிய பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும், ஆசிரியர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

💬 முதல்வர் வாழ்த்து

மாணவர்களிடம் உயர்ந்த நற்பண்புகளை விதைத்து சமூக முன்னேற்றத்தைக் கட்டமைக்கும் ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம் என முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

🏛️ விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள்:

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் என்.லதா, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், தமிழக பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் ராஜ்மோகன், எஸ்.ராஜேஸ்குமார் ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர்.

📱 Download Tamilaruvi App for Teacher & Education Updates

Post a Comment

0 Comments