2019-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET-யில் இருந்து விலக்கு: ஜம்மு காஷ்மீரில் தீர்மானம்

Jammu and Kashmir TET Exemption Resolution Pre-2019 Appointed Teachers Supreme Court
TET Exemption Resolution

2019-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET-யில் இருந்து விலக்கு: ஜம்மு காஷ்மீரில் தீர்மானம்!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சசீனா இட்டூ முன்மொழிந்த முக்கியத் தீர்மானம் - 01.01.2019-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு கோரிக்கை

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் இலையுதிர் கால கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து விலக்கு கோரும் முக்கிய தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருமதி. சகீனா இட்டூ இந்த தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார்.

01.01.2019-க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் பிரிவு 23-ல் தேவையான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மூலம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் இந்த அவையில் ஒருமனதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

📌 தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்:

📅 விலக்கு பெறும் காலம்

01.01.2019-க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை.

📜 சட்டத் திருத்தம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் பிரிவு 23-ல் மத்திய அரசு தேவையான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

🏛️ உச்ச நீதிமன்றப் பின்னணி

TET தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் 2028 ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்ச்சி பெறாவிட்டால் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் பெறுகிறது.

📱 Download Tamilaruvi App for Teacher & Government Updates

Post a Comment

0 Comments