தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் 112 இணைப் பேராசிரியர்களுக்கு இரண்டாம் நிலை கல்லூரி முதல்வர்களாகப் பதவி உயர்வு மற்றும் பணியமர்த்தல் வழங்கி தமிழக உயர்கல்வித்துறை அரசாணை (எண். 222, உயர்கல்வித்துறை, நாள்: ஆக. 31) வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து, பதவி உயர்வு பெற்றவர்கள் உடனடியாகப் பணியில் சேர்வது தொடர்பாகக் கல்லூரிக்கல்வி ஆணையர் பொன்னையா அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
📌 சுற்றறிக்கையின் முக்கிய வழிகாட்டுதல்கள்:
🎓 பதவி உயர்வு விவரம்
மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 112 இணைப் பேராசிரியர்கள் 2-ம் நிலை கல்லூரி முதல்வர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர்.
🏛️ பணி விடுவிப்பு & சேர்தல்
பதவி உயர்வு பெற்றுள்ள இணைப் பேராசிரியர்களைத் தற்போதைய பணியிலிருந்து உடனடியாக விடுவித்து, ஒதுக்கப்பட்ட புதிய இடங்களில் விரைந்து பணியேற்க சார்ந்த முதல்வர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.
📋 பொறுப்புகளை ஒப்படைத்தல்
கூடுதல் பொறுப்பில் உள்ளவர்கள் புதிய முதல்வர்களிடமோ அல்லது பணிமூப்பில் மூத்த பேராசிரியர்கள் / நிதியாளர் / இணை இயக்குநரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு விடுவிப்பு பெற வேண்டும்.
✉️ மாற்றுப்பணி ரத்து கோரிக்கை
மாற்றுப்பணியில் (Deputation) கூடுதல் பொறுப்பில் பணியாற்றும் ‘பதவி உயர்வு பெறாத’ இணை/உதவிப் பேராசிரியர்கள் ஆணையை ரத்து செய்யக் கோரி மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
📧 மின்னஞ்சல் முகவரி விவரம்:
மாற்றுப்பணி ஆணையை ரத்து செய்யக் கோரும் விண்ணப்பங்களை உடனடியாக "tndcejsection@gmail.com" என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments