அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் ஏசி, டிவி, வாஷிங்மெஷின் உள்பட அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விலையும் 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் பண்டிகை காலம் தொடங்க உள்ள நிலையில் இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.
நம் நாட்டில் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி வரை தசரா, ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று பண்டிகைகள் அணிவகுத்து வரும். வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் பொதுமக்கள் புதிய பொருட்கள் வாங்குவதும், சலுகைகள் வழங்குவதும் வழக்கமாகும். ஆனால் இந்த முறை விலை உயரவுள்ளது டீலர்களுக்கும் பொதுமக்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
📈 விலையேற்றத்தின் விவரங்கள் & காரணங்கள்
எல்இடி டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்றவற்றுக்கு 3 முதல் 4 சதவீதம் வரையும், ஏசி-க்கு 5 முதல் 8 சதவீதம் வரையும் விலை உயர உள்ளது. பணவீக்கம் காரணமாக காப்பர், அலுமினியம், ஸ்டீல், கச்சா எண்ணெய் உபபொருட்கள் மற்றும் சரக்கு கட்டணங்கள் உயர்ந்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
📌 விலை உயர்வு குறித்த முக்கிய விவரங்கள்:
பொருட்களின் விலை உயர்வு சதவீதம்
எல்இடி டிவி, வாஷிங் மெஷின் மற்றும் பிரிட்ஜ் விலை 3% முதல் 4% வரையிலும், ஏசி விலை 5% முதல் 8% வரையிலும் நிறுவனங்களைப் பொறுத்து அதிகரிக்கப்பட உள்ளது.
விலை உயர்வை அறிவித்த நிறுவனங்கள்
ப்ளூ ஸ்டார், கோத்ரேஜ் அப்ளையன்ஸ், ஹையர், டெய்க்கின், சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 4% முதல் 10% வரை விலையை உயர்த்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
வியாபாரிகள் அச்சம்
இந்த ஆண்டில் ஏற்கனவே இருமுறை விலைகள் உயர்ந்த நிலையில், தற்போது 3-வது முறையாக விலை உயர்வது பண்டிகை கால விற்பனையைப் பாதிக்கலாம் என டீலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
0 Comments