TAPS Interim Payout / CPS Final Closure குறித்த அரசாணைகள், படிவங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்கள் தொகுப்பு

அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகள்

03.01.2026 அன்று தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
  • 1) அரசாணை 7 நிதி (PGC) துறை நாள் 09.01.2026 வெளியீடு - 01.01.2026 முதல் நடைமுறை என தெரிவிக்கப்பட்டது. திட்ட விவரங்கள் வெளியிடவில்லை.
  • 2) அரசாணை 111 நிதி (TAPS) துறை நாள் 16.06.2026 இல் திட்டம் நடைமுறைக்கு வரும் வரை இடைக்கால மாத தொகை வழங்கப்படும் என அறிவிப்பு.
  • 3) இயக்குநர் கருவூல கணக்கு இயக்ககம் கடிதம் எண் 4149015/ப.ஓ.தி/2026 நாள் 29.06.2026 அனைத்து துறையில் இருந்தும் உரிய கருத்துருக்கள் அனுப்பிட சுற்றறிக்கை.
  • 4) அரசுக்கடிதம் 14190711/Finance (TAPS)/2026-3 நாள் 02.07.2026 சில தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
  • 5) கருவூலத்துறை சுற்றறிக்கை - ந.க எண் 11711/ப.ஓ.தி/2026 நாள் 10.07.2026, 22.07.2026.
  • 6) அரசாணை 152 நிதி (TAPS) துறை நாள் 28.07.2026 ஒப்பளிக்கும் அதிகாரம் நியமன அலுவலர் என்று இருந்தது. அலுவலகத் தலைவர் – பணிப் பதிவேடு பராமரிக்கும் அலுவலர் என மாற்றம்.

TAPS FAQ – சில விளக்கங்கள்

நான் 25/4/26 இல் மறு நியமனத்தில் இருந்து ஓய்வு பெற்றேன்.. எனக்கு TAPS பொருந்துமா?
1.1.26 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் தான் தற்போதைய அறிவிப்பு... 1.1.26 முன் பணியில் இருந்து ஓய்வு எனில் Interim Pay-out இல்லை.
TAPS திட்டம் நல்லதா? சிறந்ததா?
தற்போது TAPS திட்ட விதிமுறைகள் எதுவும் வரவில்லை. தற்போது வெளியிடப்பட்டது இடைக்கால நிவாரணம் (Interim Pay-out) மட்டுமே... முழுமையான திட்ட விவரங்கள் வரவில்லை.
Interim Payout வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துவிட்டால் நமது CPS தொகையை தரமாட்டார்களா?
தங்களுக்கு CPS தொகை தான் மொத்தமாக வேண்டும் எனில் இப்போதே விண்ணப்பித்து மொத்த தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்... (TAPS கோர இயலாது...). அல்லது தற்காலிக இடைக்கால நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்... TAPS திட்டம் முழுமையாக வெளிவந்த பிறகு அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனில் அந்த சமயத்திலும் வெளியேறலாம் (பெற்ற இடைக்கால நிவாரணம் வட்டியுடன் கழித்து விட்டு மீதி தொகை கிடைக்கும்).
10 ஆண்டுகள், 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 23 ஆண்டுகள் பணி புரிந்த எல்லோருக்கும் ஓரே தொகை தானா? 30%?
ஆம், இது இடைக்கால நிவாரணம் தான். எனவே 1.1.26 க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு Last Basic pay 30% Fixed.
அந்த 30% க்கு DA உண்டா?
ஆம். ஓய்வு ஊதிய காரர்களுக்கு DA என்று சொல்ல மாட்டார்கள், Dearness Relief (DR) என்பார்கள்... இந்த 30% க்கு 60% DR உண்டு.
Interim Payout எப்படி கணக்கிடுவது?
கடைசி மாத அடிப்படை ஊதியம் X 0.48. இந்த தொகை தான் இடைக்கால நிவாரணம்.
கடைசி வரை இதே தொகை தானா?
இல்லை.. TAPS rules வரும் போது அதற்கு ஏற்ப மாறுபடும்... DA அதிகரிக்கும் போது DR அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஒப்பளிப்பு அதிகாரம் (Sanctioning Authority) யார்?
அரசாணை 152 இன் படி அலுவலகத் தலைவருக்கு விண்ணப்பம் அனுப்பினால் போதும், CEO/ JD-க்கு அனுப்பவேண்டாம். தலைமை ஆசிரியரே ஒப்பளிப்பு ஆணை வழங்கிடலாம்.
• HM (HSS) தலைமை ஆசிரியருக்கு - CEO
• PGT - HM
• BT - HM
• PET/JA/LAB ASST - HM
இடைக் கால நிவாரண தொகை பள்ளிகளில் இருந்து வழங்கப்படுமா?
கருவூலத்தின் மூலம் தனியரது வங்கி கணக்கில் ECS மாதாமாதம் வரவு செய்யப்படும்.
கருவூலத்தில் தனியே விண்ணப்பிக்க வேண்டுமா?
கருவூலத்தில் நேரடியாக விண்ணப்பிக்க தேவையில்லை. அலுவலகத் தலைவரிடம் விண்ணப்பிக்க 60 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
1.1.26 க்கு பிறகு பணியில் இருக்கும் போது மரணம் அடைந்தவர் / பணி ஓய்வு பெற்று CPS தொகை பெறாமல் மரணம் அடைந்தவர் குடும்பம் இந்த Interim Payout பெற இயலுமா?
ஆம் 1.1.26 க்கு பிறகு மரணம் எனில் தகுதியான குடும்ப உறுப்பினர்கள் இந்த இடைக் கால நிவாரண தொகை பெற இயலும். (ஆனால் 1.1.26 முன் மரணம் எனில் இந்த இடைக் கால நிவாரண தொகை பெற இயலாது).
அரசாணை 111 இல் நான்கு form (விருப்ப கடிதம்) உள்ளது நான்கையும் பூர்த்தி செய்து தர வேண்டுமா?
இல்லை ஒரே ஒரு form மட்டுமே... தங்களுக்கு பொருத்தமான/விருப்பமான விண்ணப்பம்.
Form I - TAPS Interim Monthly payout
Form III - CPS final settlement பெற்றுக் கொள்கிறேன் (TAPS திட்டம் வேண்டாம்) என விருப்பம் தெரிவிக்க
Form IV - இறந்த போன பணியாளர் குடும்ப உறுப்பினர் CPS final settlement பெற்றுக் கொள்கிறேன் என விருப்பம் தெரிவிக்க
(1.1.26 பிறகு ஓய்வு/இறப்பு எனில் இந்த நான்கு விண்ணப்பத்தில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் 60 நாட்களுக்குள் முடிவு செய்து வழங்கிட வேண்டும்).
ஒரு WhatsApp பதிவில் TAPS இல் 50% ஓய்வு ஊதியம் 30% ஆக குறைப்பு? என வந்தது
தவறான புரிதல்... TAPS ஓய்வூதிய அறிவிப்பு வரவில்லை... தற்போது 30% என்பது இடைக்கால நிவாரணம். முழுமையான TAPS rules வரும் போது இந்த தொகை (கூடுதலோ / குறைவோ) சரி கட்டப் படும் என்று தான் சொல்லி உள்ளார்கள்.
TAPS/OPS எதிர்பார்த்து 1.1.26 க்கு முன் ஓய்வு பெற்ற நான் CPS தொகை இதுவரை பெறாமல் உள்ளேன்?
1.1.26 க்கு பிறகு ஓய்வு என்றால் மட்டுமே இந்த TAPS interim Payout option வழங்கப்பட்டுள்ளது... 1.1.26 முன் ஓய்வு எனில் CPS final settlement வாங்கி இருந்தாலும்/ வாங்காமல் இருந்தாலும் இந்த interim Payout option விருப்ப கடிதம் வழங்க வாய்ப்பு இல்லை.
1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்து தற்போது CPS இல் உள்ள அனைவரும் இந்த விருப்ப கடிதத்தை வழங்க வேண்டுமா?
இல்லை, 1.1.26 முதல் ஓய்வு பெற்றவர்கள் அல்லது ஓய்வு பெற உள்ளவர்கள் மட்டுமே 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். CPS இல் இருக்கும் அனைவரிடமும் விருப்ப கடிதம் எதுவும் கோரப்படவில்லை.
1.1.26 க்கு பிறகு ஓய்வு, ஆனால் பணிக்காலம் பத்து ஆண்டுகளுக்கு குறைவு... Interim Payout option உண்டா?
இல்லை.
TAPS Interim Payout வந்துள்ளது... எனவே இனி TAPS மட்டும் தானா? OPS?
1.1.26 பிறகு ஓய்வு பெற்ற 8000 மேற்பட்டவர்கள்... உரிய பலன்களை பெறாமல் தவிக்கிறார்கள் என பத்திரிகை செய்தி. OPS / CPS / TAPS அல்லது வேறு ஒரு புதிய திட்டம்... எது என்றாலும் அது அரசின் கொள்கை முடிவு. தமிழக அரசு PFRDA வில் இதுவரை இணையவில்லை... அரசு நினைத்தால் நமக்கு எதுவும் சாத்தியமே.

Declaration & Sanction Order Formats

Declaration by the retired Government servant for availing the Interim Monthly Payout

I .................... employed under the Contributory Pension Scheme (CPS Number ................) and retired from Service on superannuation on .................. from the post of .................... in the office of the .............................. hereby exercise my willingness to avail the Interim Monthly Payout until Tamil Nadu Assured Pension Scheme (TAPS) is notified by the Government.

2. I further consent to adjusting of the Interim Monthly Payout given to me from my eligible benefits based on the option I will give after the Tamil Nadu Assured Pension Scheme is notified by the Government.

Signature (Name in Block Letters)
SUB: INTERIM MONTHLY PAYOUT – Govt Servant enrolled under CPS and retired on superannuation on or after 01.01.2026 – Sanction of Interim Monthly Payout - Reg.
Ref: 1. G.O (Ms) No 111 Finance (TAPS) Dept Dt 16.06.2026
2. CPS Subscriber Index No. ......... of the retired Govt Servant
3. Option exercised by the individual concerned Dated .............

In accordance with the orders contained in the Government Order First cited and based on the option exercised by Thiru/Tmt. ...................... (Name of the retired Govt Servant), who worked in the post of ..........................(Designation) and retired on superannuation on .................... in the office of .................................... (last worked office), a sum of Rs ................ /- is hereby authorized as interim monthly payout to the individual with effect from ...................... FN.

2) The .............................. (Name of treasury office concerned) is requested to make the disbursement of the interim monthly payout authorized in paragraph one above to the individual concerned as per the details furnished in the annexure.
Employee Id Name of DDO with Code
CPS No. Option Date exercised by Employee
Name DDO Sanction Pro. No. & date
Designation with Class Sanctioning Authority
D.O.B Last Pay Drawn
D.O.J 30% of Monthly payout
D.O.REGU Sanctioned monthly payout (Minimum 10,000)
D.O.RETIRE Month of Commencement
A/C No Bank
Branch IFSC Code
Sl.No Month Gross Deductions Net Token No. Vr. No. Date
1JAN-26
2FEB-26
3MAR-26
4APR-26
5MAY-26
6JUN-26

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் (Checklist)

மேலே உள்ள இணைப்புகளுடன் தலைமை ஆசிரியருக்கு 3 பிரதிகள் தரவேண்டும்].
1) விண்ணப்பக் கடிதம்
2) Form I
3) SR FIRST TWO PAGE
4) First Appointment order
5) SR Entry Page Xerox
6) Regularization order (01.06.2006)
7) SR Entry Page Xerox
8) Retirement order
9) SR Entry Page Xerox
10) Retirement Relieving Order
11) SR Entry Page Xerox
12) SR Nomination page Xerox
13) Last Pay Slip copy (IFHRMS DOWNLOAD)
14) Bank PASSBOOK front page (clear copy)
15) Residential Address proof (Aadhar copy)

Other Attachments by the DDO

  • 1) Sanction order (prepared by Head of the office)
  • 2) Annexure 1 (system generated)
  • 3) Interim monthly pay out arrear calculation sheet if applicable (2026 Jan to July)

Post a Comment

0 Comments