DSE & DEE ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உண்டா?

DSE and DEE Teacher Transfer Counseling Stay Order High Court
Teacher Transfer Counseling Update

DSE & DEE ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உண்டா? - சென்னை உயர் நீதிமன்ற தடை ஆணை விவரம்!

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு நிலவரம்

பள்ளிக்கல்வித்துறை (DSE) மற்றும் தொடக்கக்கல்வித்துறை (DEE) ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர் வட்டாரத்தில் எழுந்துள்ளது. "ஓரிரு நாட்களில் பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து கலந்தாய்வும் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு நடைபெறும்; செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு கலந்தாய்வு தொடங்க வாய்ப்பு" என்ற செய்திகள் பரவி வரும் நிலையில், அதற்கான தற்போதைய கள நிலவரம் குறித்து இங்கு முழுமையாகப் பார்க்களாம்.

சென்னைப் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, பப்பதவி உயர்வு (Promotion) வழங்கப்பட்ட பிறகே மாறுதல் கலந்தாய்வு (Transfer Counseling) நடைபெற வேண்டும் என இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வித் துறை தரப்பில் எதிர்மனு தாக்கல் செய்து இந்தத் தடை ஆணை விலக்கப்பட்டால் மட்டுமே கலந்தாய்வு குறித்த அடுத்த கட்ட அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. தடை ஆணை தொடர்வதனால் உடனடியாக மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

📌 முக்கிய நிலவரங்கள் & காரணங்கள்:

⚖️ உயர் நீதிமன்றத் தடை

பதவி உயர்வு வழங்கப்பட்ட பிறகே மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை ஆணை பிறப்பித்துள்ளது.

🏛️ கல்வித் துறையின் நடவடிக்கை

இந்தத் தடை ஆணையை நீக்க கல்வித் துறை சார்பில் நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்து தடை ஆணை விலக்கப்பட்டால் மட்டுமே கலந்தாய்வு அட்டவணை வெளியாகும்.

தற்போதைய நிலை

தடை ஆணை தொடர்வதால், செப்டம்பர் 7-க்குப் பிறகு உடனடியாக கலந்தாய்வு தொடங்க வாய்ப்பு குறைவு.

📥 உயர் நீதிமன்றத் தடை ஆணை பதிவிறக்கம் (Download Section):

📄 Madras High Court Stay Order PDF Download

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மீதான உயர் நீதிமன்ற இடைக்காலத் தடை ஆணை (PDF) கோப்பினைப் பெற கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

📥 Download Stay Order PDF Here
📱 Download Tamilaruvi App for Teacher Counseling Updates

Post a Comment

0 Comments