சட்டப்பேரவையில் நேற்று சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை தொடர்பான அறிவிப்பை முதல்வர் விஜய் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சி.ரமேஷ் வெளியிட்டார். இதன் கீழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
📌 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
🎓 சென்னை ஐஐடி மூலம் பயிற்சி
வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு சென்னை ஐஐடி (IIT Madras) மூலம் 'அப்ளைடு டேட்டாபேஸ் சிஸ்டம்', 'அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் மேனுபேக்சரிங்' போன்ற சிறப்புப் பயிற்சிப் படிப்புகள் வழங்கப்படும்.
🛡️ தொழில் & பாதுகாப்புப் பயிற்சி
வேலையற்ற இளைஞர்களுக்கு தொழில் பாதுகாப்பு, தீ பாதுகாப்பு, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கட்டுமானப் பாதுகாப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு சர்வதேச சான்றிதழ்கள் வழங்கப்படும்.
🌍 உலகளாவிய சான்றிதழ்கள்
நடப்பு கல்வி ஆண்டில் உயர் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டக்கழகம் வாயிலாக உலகளாவிய சான்றிதழ் பயிற்சிகள் அளிக்கப்படும்.
💼 வேலைவாய்ப்புத் துறைகள்
உற்பத்தி, கட்டுமானம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, கிடங்குகள், மருத்துவமனைகள், விடுதிகள் மற்றும் எரிசக்தி துறை போன்ற பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
0 Comments