‘சூப்பர் எல் நினோ’ (Super El Nino) நிகழ்வினால் நாடு முழுவதும், குறிப்பாக குறுவைப் பருவத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் அதிக அளவு தாக்கம் ஏற்படும் என மத்திய அரசு ஏற்கனவே அடையாளம் கண்டு, மாநில அரசிற்கு அறிவுறுத்தியுள்ளது.
📍 பாதிக்கப்படும் 12 மாவட்டங்கள்:
அரியலூர்
தர்மபுரி
திண்டுக்கல்
கிருஷ்ணகிரி
நாமக்கல்
நீலகிரி
பெரம்பலூர்
திருச்சி
திருப்பத்தூர்
வேலூர்
விருதுநகர்
ராமநாதபுரம்
🌱 மாற்றுப் பயிர் சாகுபடிப் பரிந்துரை:
எல் நினோ தாக்கத்தால் பாதிக்கப்படும் மேற்கண்ட 12 மாவட்டங்களில், அதிக நீர்த் தேவை இல்லாத எள், பயறு உள்ளிட்ட குறுகிய காலப் பயிர்களைச் சாகுபடி செய்யுமாறு மத்திய மானாவரி பயிர் ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளுக்குப் பரிந்துரைத்துள்ளது.
0 Comments