கள்ளர் பள்ளிகளுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு.

Kallar Reclamation School Teachers Transfer Counseling Schedule 2026-2027
Kallar School Transfer Counseling 2026-2027

கள்ளர் பள்ளிகளுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு மற்றும் அட்டவணை!

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கான EMIS வழிமுறைக் கலந்தாய்வு

இணை இயக்குநர் (க.சீ) அலுவலகம், மதுரை-20 அவர்களின் சுற்றறிக்கைப்படி, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், சரக மேற்பார்வையாளர்கள் மற்றும் விடுதி காப்பாளர் / காப்பாளினிகளுக்கும் 2026-2027-ஆம் கல்வியாண்டில் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலமாக (EMIS) 01.07.2026 அன்றைய நிலையில் உள்ள காலிப்பணியிடங்கள் அடிப்படையில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

📅 கலந்தாய்வு நடைபெறும் நாள் மற்றும் நேர விபரங்கள்:

வ.எண் பணியாளர் / ஆசிரியர் விவரம் நாள் மற்றும் நேரம்
1 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் 02.09.2026
10.00 AM - 11.00 AM
2 கணினி பயிற்றுநர் நிலை - I மாறுதல் NO VACANCY
3 உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் சரக மேற்பார்வையாளர் (பூஜ்ஜிய கலந்தாய்வு) 02.09.2026
11.15 AM - 12.00 PM
4 நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் 02.09.2026
2.00 PM - 3.00 PM
5 பட்டதாரி ஆசிரியர்கள் (பாடவாரியாக) மாறுதல் 03.09.2026
10.00 AM - 11.30 AM
6 பட்டதாரி காப்பாளர் / காப்பாளினிகள் மாறுதல் 03.09.2026
11.45 AM - 12.15 PM
7 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் 03.09.2026
12.15 PM - 1.00 PM
8 இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் 03.09.2026
2.15 PM - 3.15 PM
9 இடைநிலை காப்பாளர் / காப்பாளினிகள் மாறுதல் 03.09.2026
3.30 PM - 3.45 PM
10 சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஓவிய ஆசிரியர்) மாறுதல் 03.09.2026
3.45 PM - 4.00 PM

முக்கியக் குறிப்பு: மேலும், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் (பாடவாரியாக) மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

📱 Download Tamilaruvi App for Teacher Updates

Post a Comment

0 Comments