அரசு நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரையுள்ள காலங்களில் தேர்வுநிலை / சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு தர ஊதியம் (Pay Band 15600-39100-5400 / 5700) நிர்ணயம் செய்வது தொடர்பாகத் தணிக்கைத் தடை சார்பாக வழக்குகள் தொடரப்பட்டன.
குறிப்பாக, பட்டதாரி / நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்குத் தணிக்கைத் தடை சார்பாகத் தொடரப்பட்ட தொகுப்பு வழக்கு எண் W.P.No.12275/2024-ல் ஊதிய நிர்ணயம் மீது பெறப்பட்ட 02.03.2026 நாளிட்ட தீர்ப்பாணையின் மீதும் மற்றும் பிற வழக்குகளின் மீதும் பெறப்பட்டுள்ள தீர்ப்பாணைகளின் மீது அரசு மேல்முறையீடு செய்து தடை ஆணை பெற்றுள்ள நிலையில், அனைத்து வழக்குகளையும் மேல்முறையீடு செய்யத் தொடக்கப் கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைகளை வெளியிட்டுள்ளார்.
📌 செயல்முறை முக்கிய விவரங்கள்:
👩🏫 தகுதியானவர்கள்
01.01.2006 முதல் 31.05.2009 வரை தேர்வுநிலை / சிறப்பு நிலை பெற்ற தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்.
⚖️ நீதிமன்ற வழக்கு
தணிக்கைத் தடை சார்பாகத் தொடரப்பட்ட தொகுப்பு வழக்கு எண் W.P.No.12275/2024 மற்றும் பிற தீர்ப்பாணைகள்.
🏛️ அரசின் நடவடிக்கை
அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு தடை ஆணை பெறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அனைத்து வழக்குகளிலும் மேல்முறையீடு தாக்கல் செய்ய நடவடிக்கை.
0 Comments