டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை அடுத்து, தேர்வர்கள் பயன்பெறும் வகையில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைந்து சென்னையில் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.
📌 பயிற்சி வகுப்புகளின் விவரங்கள்:
📍 பயிற்சி மையம்
சென்னை பாரிமுனை, அரண்மனைக்காரன் தெரு, கச்சாலீஸ்வரர் ஆலயம் அருகே அகரஹாரம் சந்தில் அமைந்துள்ள அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம்.
⏰ வகுப்புகள் நடைபெறும் நேரம்
வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறமையான பயிற்சியாளர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும்.
👥 தகுதிபெறுவோர் யார்?
ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏனைய வகுப்பினரும் இ்ப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
🏆 சிறப்புச் சாதனை
இங்கு பயிற்சி பெற்றவர்களில் 1300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் இதுவரை மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு உடனடியாக முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments