பொறியியல் மாணவர்கள் புராஜெக்ட் செய்ய ரூ.25,000 நிதியுதவி

Anna University Engineering Students Project Grant Rs 25000
Anna University Research Grant 2026

பொறியியல் மாணவர்கள் புராஜெக்ட் செய்ய ரூ.25,000 நிதியுதவி: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான ஆராய்ச்சி நிதி உதவித் திட்டம் மற்றும் வழிகாட்டுதல்கள்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி ஊக்குவிப்பு, ஆலோசனை மையத்தின் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி, ஆராய்ச்சி ஊக்குவிப்பு மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆராய்ச்சி நிதியுதவி திட்டத்தின் கீழ் புராஜெக்ட் கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல் பயிலும் 3-ம் ஆண்டு மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 6 மாத கால புராஜெக்ட்டுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படும். திட்ட கருத்துருக்களை ஆன்லைனில் செப்.15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

📌 திட்டத்தின் முக்கிய விவரங்கள்:

🎓 தகுதி

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் பயிலும் 3-ம் ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

💰 நிதியுதவித் தொகை

6 மாத கால புராஜெக்ட்டுக்கு அதிகபட்சமாக ரூ.25,000 வரை ஆராய்ச்சி நிதியுதவி வழங்கப்படும்.

🗓️ கடைசி நாள்

திட்டக் கருத்துருக்களை (Project Proposals) ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 15 ஆகும்.

🔗 ஆன்லைனில் விண்ணப்பிக்க & கூடுதல் விவரங்களுக்கு:

🌐 Anna University CTDT SIP Portal

திட்டக் கருத்துருக்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களை அறிய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்

👉 Click Here to Apply Online
📱 Download Tamilaruvi App for Student Project Updates

Post a Comment

0 Comments