செயல்முறைகள்: ந.க.எண்.01489/T.S1/2026
நாள்: 01.07.2026
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET - தாள் I & தாள் II) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களுக்கான உண்மைத்தன்மை (Genuineness Certificate) பெறுவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
⚠️ முக்கிய எச்சரிக்கை
தனிநபர்கள், பள்ளிகள் அல்லது வட்டாரக் கல்வி அலுவலகங்களில் இருந்து நேரடியாகவோ அல்லது தனித்தனியாகவோ ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (TRB) விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது!
வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- தகுதி: TNTET–2025 தாள்–I மற்றும் தாள்–II தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த உண்மைத்தன்மை சான்றிதழுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- ஒருங்கிணைப்பு: மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் மட்டுமே TRB அலுவலகம் உண்மைத்தன்மைச் சான்றிதழை வழங்கும்.
விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
1
ஆசிரியர்கள்: தாங்கள் பணிபுரியும் பள்ளித் தலைமையாசிரியர் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
⬇
2
தலைமையாசிரியர்: விண்ணப்பங்களைச் சரிபார்த்து வட்டாரக் கல்வி அலுவலருக்கு (BEO) அனுப்ப வேண்டும்.
⬇
3
வட்டாரக் கல்வி அலுவலர் (BEO): விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) / முதன்மைக் கல்வி அலுவலருக்கு (CEO) பரிந்துரையுடன் அனுப்ப வேண்டும்.
⬇
4
DEO / CEO: ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான பட்டியலை TRB-க்கு அனுப்பி வைப்பார்கள்.
📝 ஆசிரியர்களுக்கான குறிப்பு: உண்மைத்தன்மைச் சான்றிதழ் பெற விரும்பும் ஆசிரியர்கள், தாமதமின்றி தாங்கள் பணிபுரியும் பள்ளியின் தலைமையாசிரியரை உடனடியாகத் தொடர்புகொண்டு தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
0 Comments