TNTET 2026 Paper 2 (Maths & Science) Answer Key Released - PDF Download

TNTET 2026: Paper 2 (Maths & Science) விடைக்குறிப்புகள் வெளியீடு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு - கணிதம் மற்றும் அறிவியல்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பாக 2026 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET - 2026) தாள் - 2 (Paper II) சமீபத்தில் நடைபெற்றது. இதில் கணிதம் மற்றும் அறிவியல் (Mathematics & Science) பாடப்பிரிவிற்கான உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer Key) தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் தேர்வு எழுதிய பட்டதாரி ஆசிரியர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் விடைக்குறிப்பைப் பதிவிறக்கம் செய்து தங்களது விடைகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

📊 Paper 2 தேர்வு விவரங்கள்:

🗓️ தேர்வு தேதி: 05.07.2026
👥 தாள் 2 எழுதியவர்கள்: 1,60,925 நபர்கள்
ஆட்சேபனை தெரிவிக்க கடைசி நாள்: 22.07.2026 (5.30 PM)

📥 Maths & Science Answer Key Download

கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து உத்தேச விடைக்குறிப்பை PDF வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்:

🔬 Download TNTET 2026 Paper 2 (Maths & Science) Key

⚠️ விடைக்குறிப்பு மீதான ஆட்சேபனைகள்

TRB வெளியிட்டுள்ள இந்த உத்தேச விடைகளில் மாற்றுக்கருத்து இருந்தால், தகுந்த ஆதாரங்களுடன் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி முறையிடலாம்:

  • கால அவகாசம்: 15.07.2026 முதல் 22.07.2026 பிற்பகல் 5.30 மணி வரை மட்டுமே ஆட்சேபனைகள் ஏற்கப்படும்.
  • இணையதளம் மட்டுமே: TRB-யின் அதிகாரப்பூர்வ Objection Tracker URL (https://trbtucanapply.com) மூலம் மட்டுமே கோரிக்கைகளைப் பதிவு செய்ய வேண்டும்.
  • சரியான ஆதாரம்: பாடப்புத்தகங்களை (Standard Text Books) மட்டுமே ஆதாரமாக இணைக்க வேண்டும். கையேடுகளை (Guides, Notes) ஆதாரமாக ஏற்க இயலாது.

Post a Comment

0 Comments