TNPSC : குரூப்-4 தேர்வு பணிகள்: ஆக.17-ல் கலந்தாய்வு

TNPSC குரூப்-4 தேர்வு

4-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு

TNPSC Group 4 Counselling Certificate Verification Schedule Chennai

டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வில் தட்டச்சர் (Typist) மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist) பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 4-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் 17-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

📌 கலந்தாய்வு விவரங்கள்:

📅

தேதி

ஆகஸ்ட் 17

💼

பதவிகள்

தட்டச்சர் & சுருக்கெழுத்து தட்டச்சர்

📍

இடம்

சென்னை (TNPSC அலுவலகம்)

📂 கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் (Required Documents):

கலந்தாய்விற்குச் செல்லும் மாணவர்கள் கீழ்க்காணும் அசல் ஆவணங்களை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்:

  • இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அழைப்பாணை (Downloaded Call Letter / Memo).
  • 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Sheets).
  • பட்டப்படிப்பு சான்றிதழ் (Degree Certificate / Provisional - இருந்தால்).
  • தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்ச்சி சான்றிதழ்கள் (Typewriting / Shorthand Certificates - English & Tamil).
  • சாதிச் சான்றிதழ் (Community Certificate).
  • ஆதார் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள அட்டை (Original ID Proof).
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
  • PSTM சான்றிதழ் (தமிழ் வழியில் பயின்றதற்கான இடஒதுக்கீடு கோரியிருந்தால்).
பதிவிறக்கம் செய்ய: tnpsc.gov.in

⚠️ முக்கிய அறிவிப்பு: இதற்கான அழைப்பாணையைத் தேர்வர்கள் TNPSC இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட தேதியில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத் தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments