பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் "கலைத்திருவிழா" மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. பாடல், நடனம், நாடகம், ஓவியம் என மாணவர்களின் பல்வேறு படைப்பாற்றலை ஊக்குவிக்க இந்த ஆண்டு "இளையோர் திறன்" என்ற மையக்கருத்தில் போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி, இந்த ஆண்டுக்கான முழுமையான சுற்றறிக்கை மற்றும் நெறிமுறைகளை கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
போட்டிகள் நடைபெறும் கால அட்டவணை (Schedule)
| வகுப்புகள் | பள்ளி அளவு | குறுவள மையம் (Cluster) | வட்டார அளவு (Block) | மாவட்ட அளவு | மாநில அளவு (State) |
|---|---|---|---|---|---|
| 11 & 12 | 23.07.2026 to 06.08.2026 | Nil | 11.08.2026 to 14.08.2026 | 20.08.2026 to 27.08.2026 | 07.10.2026 (Govt) & 08.10.2026 (Aided) - Villupuram |
| 9 & 10 | 23.07.2026 to 04.08.2026 | Nil | 11.08.2026 to 14.08.2026 | 20.08.2026 to 27.08.2026 | 07.10.2026 (Govt) & 08.10.2026 (Aided) - Thanjavur |
| 6 to 8 | 03.08.2026 to 14.08.2026 | Nil | 01.09.2026 to 09.09.2026 | 08.10.2026 to 15.10.2026 | 27.10.2026 (Govt & Aided) - Coimbatore |
| 1 to 5 | 03.08.2026 to 14.08.2026 | 19.08.2026 to 21.08.2026 | 01.09.2026 to 09.09.2026 | 08.10.2026 to 15.10.2026 | 28.10.2026 (Govt & Aided) - Madurai |
பிரிவு வாரியான போட்டிகள் & கால அளவு ⏱️
பிரிவு 1 & 2: தொடக்கப்பள்ளி (1 முதல் 5 வகுப்புகள்)
- ஒப்புவித்தல் - மழலையர் பாடல் (தமிழ் & ஆங்கிலம்) 3 நிமிடம்
- கதை கூறுதல் / பேச்சுப் போட்டி (தமிழ் & ஆங்கிலம்) 5 நிமிடம்
- வண்ணம் தீட்டுதல் / களிமண் பொம்மைகள் செய்தல் 60 நிமிடம்
- திருக்குறள் ஒப்புவித்தல் / மாறுவேடப் போட்டி / பாவனை நடிப்பு 3 நிமிடம்
- நாட்டுப்புற பாடல் / நாட்டுப்புற நடனம் / பரத நாட்டியம் 5 நிமிடம்
பிரிவு 3: நடுநிலைப்பள்ளி (6 முதல் 8 வகுப்புகள்)
- ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் 45 நிமிடம்
- பானை ஓவியம் / களிமண் சிற்பம் / ரங்கோலி 60 நிமிடம்
- மணல் சிற்பம் / செதுக்குச் சிற்பம் (காய்கறி/சோப்பு/மெழுகு) 90 நிமிடம்
- வாய்ப்பாட்டு / நடனம் (நாட்டுப்புறம், பரதநாட்டியம், Free style) 5 நிமிடம்
- வில்லுப்பாட்டு / குழு நாடகம் (5 பேர்) 10 நிமிடம்
பிரிவு 4 & 5: உயர் & மேல்நிலை (9 முதல் 12 வகுப்புகள்)
- தோல் கருவி: பம்பை, உருமி, பறை, மிருதங்கம், தபேலா, Drums 5 நிமிடம்
- காற்றுக் கருவிகள்: நாதஸ்வரம், புல்லாங்குழல், ஹார்மோனியம், கீ போர்டு 5 நிமிடம்
- தந்திக் கருவிகள்: வயலின், வீணை, கோட்டு வாத்தியம், கிட்டார் 5 நிமிடம்
- நாடகம்: குழு நாடகம், பொம்மலாட்டம் (தோல்பாவை, மரப்பாவை) 10 நிமிடம்
- ஓவியம் / கேலி சித்திரம் வரைதல் (A3 Size Chart) 60 நிமிடம்
பள்ளி அளவிலான முக்கிய விதிமுறைகள் 📝
- கட்டணம் இல்லை: கலைத்திருவிழாப் போட்டிகளில் பங்குபெற எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது.
- பங்கேற்பு வரம்பு: ஒரு மாணவர் அதிகபட்சமாக மூன்று தனிப் போட்டிகள் மற்றும் இரண்டு குழுப்போட்டிகளில் மட்டுமே பங்குபெற முடியும்.
- EMIS பதிவு: போட்டிகளில் பங்குபெறுவோரின் விவரங்களை போட்டியின் முன்பாகவும், முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை போட்டி முடிந்த பின்னும் EMIS-ல் பதிவு செய்ய வேண்டும்.
- போட்டிப் பொருட்கள்: வண்ணம் தீட்டுதல், ஓவியம் போட்டிகளுக்கு தாள்கள்/Chart மட்டுமே பள்ளி தரப்பில் வழங்கப்படும். பிற உபகரணங்களை மாணவர்களே கொண்டுவர வேண்டும்.
- நடுவர்கள்: ஒவ்வொரு கலை இனத்திற்கும் கட்டாயமாக 3 நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும். நடுவர்களின் முடிவே இறுதியானது.
சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான (CWSN) நெறிமுறைகள்
ID (Intellectual Disability), ASD (Autism Spectrum Disorder), CP (Cerebral Palsy) ஆகிய குறைபாடுடைய மாணவர்களுக்கு சிறப்புப் போட்டிகள் (வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், களிமண் பொம்மை) தனியாக நடத்தப்படும்.
முக்கிய குறிப்பு: இம்மாணவர்களின் படைப்புகள் 5 நிமிடத்திற்கு மிகாமல் காணொலியாக (Video) எடுக்கப்பட்டு, பள்ளியின் Google Drive-ல் பதிவேற்றம் செய்து, அதன் லிங்க்கினை EMIS தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 18 வகையான குறைபாடுடைய மாணவர்கள் பொதுப்பிரிவில் சக மாணவர்களுடன் இணைந்து பங்கேற்கலாம்.
0 Comments