அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித்தொகைகளும் (Scholarships), நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனைச் சீராகச் செயல்படுத்த மாணவர்களின் முழுமையான விவரங்களை EMIS வலைதளத்தில் பிழையின்றி உள்ளீடு செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
EMIS தளத்தில் கட்டாயம் சரிபார்க்க வேண்டியவை
பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் தொய்வின்றிச் செயல்பட, கீழ்க்கண்ட விவரங்கள் EMIS தளத்தில் சரியாக உள்ளீடு செய்யப்பட்டுள்ளதை தலைமையாசிரியர்கள் கட்டாயமாக உறுதி செய்ய வேண்டும்.
ஆதார் எண்
வங்கி கணக்கு எண்
ஆண்டு வருமானம்
சாதி விவரம் (Community)
தலைமையாசிரியர்கள் மற்றும் CEO-க்களின் முக்கியப் பொறுப்புகள்:
- தலைமையாசிரியரின் பொறுப்பு: மாணவர்களின் ஆதார், வங்கிக் கணக்கு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழ் விவரங்களை எவ்விதப் பிழையுமின்றி சரிபார்த்து உள்ளீடு செய்ய வேண்டும். (இப்பணிக்கு முழுப்பொறுப்பு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரே ஆவார்).
- CEO-க்களின் கண்காணிப்பு: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் (CEOs) தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளிலும் EMIS தரவுகள் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். (இப்பணிக்கு CEO மற்றும் அவரது நேர்முக உதவியாளரே முழுப் பொறுப்பாவார்).
- வங்கிக் கணக்கு முடக்கம்: செயல்பாடற்ற (Inactive) மாணவர்களின் வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அஞ்சல் துறை (IPPB) மூலம் உடனடியாகப் புதிய வங்கிக் கணக்குகள் துவங்கப்பட வேண்டும்.
🌟 கிராமப்புற மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு:
கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (MBC & DNC) நலத்துறையால் 3 முதல் 6-ம் வகுப்பு வரை சிறப்பூகத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கிராமப்புறங்களில் பயிலும் மாணவர்களுக்கு EMIS தளத்தில் 'கிராமப்புறம்' (Rural) என கட்டாயமாகச் சரியாகக் குறிக்கப்பட வேண்டும்!
0 Comments