10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே சாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள்: தலைமையாசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
School Login App மூலம் மாணவர்களின் தரவுகளை உடனடியாகப் பதிவேற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, 2026-2027 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ/மாணவியர்களுக்குப் பள்ளிகளிலேயே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வழங்குவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆணை வெளியீடு: தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள், சென்னை - 6.
சுற்றறிக்கை எண்: ந.க.எண். 12328/8/2/2025.
நாள்: 01.07.2026.
அரசாணை: பள்ளிக் கல்வித் (பக5(2)) துறை அரசாணை (நிலை) எண். 06, நாள் 09.01.2026.
திட்டத்தின் முக்கிய நோக்கம்
10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்காக அலையும் நிலையினைத் தவிர்க்கும் பொருட்டு, வருவாய்த் துறை மூலம் பயிலும் பள்ளிகளிலேயே இந்த இருவகைச் சான்றிதழ்களையும் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
பள்ளித் தலைமையாசிரியர்கள் உடனடியாகச் செய்ய வேண்டியவை
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த, அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தமிழ்நாடு கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் (EMIS) 'School Login' தளத்தில் மாணவர்களின் விவரங்களை உடனடியாகப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பணி 1: சான்றிதழ் விவரங்கள் சரிபார்ப்பு
10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில், ஏற்கனவே சாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் பெற்றிருப்பவர்களின் விவரங்களையும், புதிதாகச் சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவர்களின் விவரங்களையும் கண்டறிய வேண்டும்.
பணி 2: 'ஆம்/இல்லை' எனப் பதிவு செய்தல்
School Login App-ல் மாணவர்களின் பெயருக்கு நேராக உள்ள பிரிவில், சான்றுகள் ஏற்கனவே பெற்றிருக்கும் மாணாக்கர்கள் மற்றும் புதிதாகத் தேவைப்படும் மாணாக்கர்கள் என்ற விவரங்களை ஆம்/இல்லை (Yes/No) எனச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும்.
கடைசி தேதி நினைவூட்டல்!
மாணவர்களின் சான்றிதழ் தேவை குறித்த விவரங்கள் (Yes/No) மற்றும் ஆதார் எண் பதிவுகள் ஆகியவற்றை School Login தளத்தில் கீழ்க்கண்ட தேதிக்குள் கட்டாயம் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது:
ஜூலை 13 - மாலை 5 மணிக்குள்பள்ளித் தலைமையாசிரியர்கள் இப்பணிகளை எவ்விதத் தாமதமுமின்றி விரைந்து முடித்திட வேண்டும்.
0 Comments