தமிழகத்தில் 2,482 அரசுப் பள்ளிகள் மூடும் அபாயம்: மாவட்ட வாரியான முழுமையான பட்டியல்!

தமிழகத்தில் 2,482 அரசுப் பள்ளிகள் மூடும் அபாயம்!

ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள்: மாணவர் சேர்க்கை குறைவால் அதிர்ச்சி ரிப்போர்ட்

📌 விரிவான செய்தியின் சுருக்கம்:

  • தமிழகத்தில் செயல்படும் 31,343 அரசு பள்ளிகளில் 16,99,715 மாணவர்கள் பயில்கின்றனர்.
  • நடப்பு ஆண்டில் ஒரு மாணவர் கூட இல்லாத காரணத்தால் 255 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
  • 2,482 பள்ளிகளில் 1 முதல் 9 மாணவர்கள் மட்டுமே (ஒற்றை இலக்கம்) படிக்கும் அவலநிலை.

கொரோனா பரவல் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியின் போது, பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்ற நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்தது. ஆனால், கொரோனா பாதிப்புகள் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பின், மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் படையெடுத்து வருகின்றனர். இதன் விளைவாக, அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

💡 மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசின் முன்னெடுப்புகள்:

அரசு பள்ளிகளில் சேர்க்கையை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, மருத்துவ மற்றும் தொழில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, மற்றும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி பெற மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இத்தனை சலுகைகள் வழங்கப்பட்ட போதிலும், மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருவது கல்வித்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

🏢 மூடும் நிலையில் பள்ளிகள் & ஆசிரியர்களின் நிலை

நடப்பு கல்வி ஆண்டில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படாததால், 48 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்பட இதுவரை மொத்தம் 255 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இந்தப் பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் அனைவரும் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, 1 முதல் 9 என்ற ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் தமிழகம் முழுவதும் 2,482 இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் அல்லது ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். வரும் ஆண்டுகளில் இந்த பள்ளிகளிலும் சேர்க்கை 'பூஜ்ஜியம்' என்ற நிலையை அடைந்தால் அவையும் முழுமையாக மூடப்படும் அபாயம் உள்ளது.

📊 ஒற்றை இலக்க மாணவர் கொண்ட அரசு பள்ளிகள் (மாவட்ட வாரியாக)

மாவட்டம்பள்ளிகள் எண்ணிக்கை
திருப்பூர்147
சிவகங்கை146
ராமநாதபுரம்139
திண்டுக்கல்131
ஈரோடு128
தூத்துக்குடி118
திருவண்ணாமலை116
கரூர்110
திருவள்ளூர்96
நாமக்கல்94
மதுரை85
கோவை80
சேலம்81
விருதுநகர்80
விழுப்புரம்79
தருமபுரி78
கிருஷ்ணகிரி69
புதுக்கோட்டை68
கடலூர்67
மாவட்டம்பள்ளிகள் எண்ணிக்கை
வேலூர்55
திருநெல்வேலி52
தஞ்சாவூர்52
ராணிப்பேட்டை48
திருச்சி48
நீலகிரி44
தேனி44
செங்கல்பட்டு32
அரியலூர்27
திருவாரூர்27
தென்காசி26
கள்ளக்குறிச்சி24
காஞ்சிபுரம்20
கன்னியாகுமரி19
மயிலாடுதுறை16
திருப்பத்தூர்15
நாகப்பட்டினம்12
பெரம்பலூர்7
சென்னை2
மொத்தம் 2,482

Post a Comment

0 Comments