ஜூலை 20-ல் நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு | NEET UG 2026 Re-Exam Results

www.tamilaruvi.in

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு: தேசிய தேர்வுகள் முகமை திட்டம்

நீட் தேர்வு ரத்து மற்றும் மறுதேர்வு

நாடுமுழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி 2026-27-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ம் தேதி நடைபெற்றது.

இதில் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டதால், அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற மறுதேர்வு

அதன்படி, பலத்த பாதுகாப்புடன் நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெற்றது. நாடுமுழுவதும் 551 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், சிங்கப்பூர் உள்ளிட்ட 14 வெளிநாடுகளில் சுமார் 5,500 மையங்களில் நடந்த தேர்வில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

20 லட்சம்+ மொத்த மாணவர்கள் (இந்தியா & வெளிநாடுகள்)
1.20 லட்சம்+ தமிழக மாணவர்கள் (307 மையங்கள்)
20 ஆயிரம்+ சென்னை மாணவர்கள் (43 மையங்கள்)

தேர்வு முடிவுகள் வெளியீடு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு முடிவுகளை வரும் ஜூலை 20-ம் தேதி வெளியிட தேசிய தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.

www.tamilaruvi.in

Post a Comment

0 Comments