🥗 திட்டத்தின் நோக்கம்:
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் சத்தான காலை உணவை உட்கொண்டு வகுப்பினை ஆரோக்கியமாகத் தொடங்குவதையும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கவனச் சிதறலைத் தவிர்த்து சிறந்த கற்றல் சூழலை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, இத்திட்டத்தின் செயல்பாட்டில் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
📋 பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்:
- இதுபோன்ற உணவு வழங்கப்படாத நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் மீண்டும் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- பள்ளிகளில் உணவுப் பொருட்கள் உரிய அளவில் இருப்பதை எந்நேரமும் உறுதி செய்ய வேண்டும்.
- மாணவ, மாணவியர்களுக்கு தினசரி தரமான மற்றும் போதுமான அளவு உணவு வழங்கப்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
- மாணவர்கள் வழங்கப்படும் உணவை முறையாக உட்கொள்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் (BEO) மூலமாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்குமாறு, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments