9 பள்ளியை மூட முடிவு!
திருப்பூர் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளின் அவல நிலை
- ஒரு மாணவர் கூட இல்லாமல் என்ன செய்வது?
- விழிப்புணர்வு ஏற்படுத்த தவறிய அதிகாரிகள்.
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை கடுமையாகச் சரிந்துள்ளதால், ஒரு மாணவர் கூட இல்லாத 9 அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மேலும், இம்மாவட்டத்தில் 144 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10-க்கும் குறைவாகவே உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தாராபுரம் கல்வி மாவட்டத்தில் 7 பள்ளிகளும், திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 2 பள்ளிகளும் என மொத்தம் 9 பள்ளிகளில் இதுவரை ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை. வேலை தேடிப் பெற்றோர் வெளியூர் செல்வது, கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வது போன்ற காரணங்களால் மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
"ஒரு மாணவர் கூட சேராத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் துரிதப்படுத்த கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதனைச் செய்யாததால், தற்போது 9 பள்ளிகளை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது."
நடப்பு கல்வியாண்டில் மூடப்பட உத்தேசித்துள்ள அரசு துவக்கப்பள்ளிகள் (திருப்பூர் மாவட்டம்)
| ஒன்றியம் | 10க்கும் குறைவாக மாணவர் உள்ள பள்ளி | மாணவரே இல்லாத பள்ளி |
|---|---|---|
| மூலனூர் | 37 | 3 |
| குண்டடம் | 31 | 1 |
| தாராபுரம் | 26 | 1 |
| வெள்ளகோவில் | 15 | - |
| மடத்துக்குளம் | 7 | 1 |
| உடுமலை | 6 | 1 |
| அவிநாசி | 5 | 1 |
| குடிமங்கலம் | 4 | - |
| திருப்பூர் வடக்கு | 4 | - |
| பொங்கலூர் | 3 | 1 |
| ஊத்துக்குளி | 3 | - |
| திருப்பூர் தெற்கு | 2 | - |
| காங்கயம் | 1 | - |
| மொத்தம் | 144 | 9 |
0 Comments