தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (STET) இணையவழிப் பயிற்சி 2026
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் தற்போது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், அத்தேர்வினை 2026 ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த தேர்வினை எதிர்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இணையதளம் வாயிலாக 08.06.2026 முதல் 30.06.2026 முடிய பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி தினமும் மாலை 06.30 மணி முதல் 08.00 மணி முடிய நடைபெறும்.
பயிற்சிக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP)
- இப்பயிற்சியானது இடைநிலை ஆசிரியர்கள் (SGT) தாள்-1 மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் (BT) தாள்-2 தேர்வினை எதிர்கொள்ள உதவும் வகையில் SCERT ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்த வலுவூட்டுதல் பயிற்சித் திட்டம் முழுவதுமாக இயங்கலை (Online) முறையில் மட்டுமே நடத்தப்படும்.
- முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் பங்கேற்க முடியும்.
- வழிகாட்டுதல் அமர்வுகளின்போது, பாட வல்லுநர்களால் எந்தவிதமான குறிப்புப் பொருட்களோ (Reference materials) கூடுதல் ஆதாரங்களோ பகிரப்பட மாட்டாது. பங்கேற்பாளர்கள் தனிப்பட்ட குறிப்புகளை எடுத்துக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
- ஆசிரியர்கள் தடையற்ற இணைய வசதி, செயல்பாட்டில் உள்ள ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் மற்றும் இடையூறு இல்லாத அமைதியான இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- இந்த பயிற்சிகள் TET பாடத்திட்டத்தின் முக்கிய தலைப்புகள் குறித்த தெளிவான கருத்தியல் கண்ணோட்டத்தை வழங்குவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்களை கொண்டு சுய தயாரிப்பைத் தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்பதிவு மற்றும் பதிவு செய்ய வேண்டிய விவரங்கள்
ஆசிரியர்கள் தங்களது கீழ்க்காணும் துல்லியமான விவரங்களை Google படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்:
- பெயர் (Name)
- வயது (Age)
- பணி அனுபவம் (Experience)
- பதவி (Designation)
- EMIS ID
- கைபேசி எண் (Mobile Number)
- மின்னஞ்சல் முகவரி (Email ID)
- பள்ளி முகவரி (School Address)
- கல்வி ஒன்றியம் (Educational Block)
- மாவட்டம் (District)
வெற்றிகரமாக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பயிற்சி வகுப்பிற்கான YouTube லிங்க் அனுப்பி வைக்கப்படும்.
பயிற்சி கால அட்டவணை (08.06.2026 முதல் 30.06.2026 வரை)
| தேதி / நாள் | நேரம் | தாள் 1 (TET 1) | தாள் 2 (TET 2) |
|---|---|---|---|
| 08-06-2026 (திங்கள்) | 06.30 PM - 08.00 PM | அறிமுகம், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை | அறிமுகம், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை |
| 09-06-2026 (செவ்வாய்) | 06.30 PM - 08.00 PM | தமிழ் | தமிழ் |
| 10-06-2026 (புதன்) | 06.30 PM - 08.00 PM | ஆங்கிலம் | ஆங்கிலம் |
| 11-06-2026 (வியாழன்) | 06.30 PM - 08.00 PM | கணிதம் | கணிதம், சமூக அறிவியல் |
| 12-06-2026 (வெள்ளி) | 06.30 PM - 08.00 PM | அறிவியல், சமூக அறிவியல் | அறிவியல், சமூக அறிவியல் |
| 13-06-2026 (சனி) மற்றும் 14-06-2026 (ஞாயிறு) - விடுமுறை | |||
| 15-06-2026 (திங்கள்) | 06.30 PM - 08.00 PM | குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை | குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை |
| 16-06-2026 (செவ்வாய்) | 06.30 PM - 08.00 PM | தமிழ் | தமிழ் |
| 17-06-2026 (புதன்) | 06.30 PM - 08.00 PM | ஆங்கிலம் | ஆங்கிலம் |
| 18-06-2026 (வியாழன்) | 06.30 PM - 08.00 PM | கணிதம் | கணிதம், சமூக அறிவியல் |
| 19-06-2026 (வெள்ளி) | 06.30 PM - 08.00 PM | அறிவியல், சமூக அறிவியல் | அறிவியல், சமூக அறிவியல் |
| 20-06-2026 (சனி) மற்றும் 21-06-2026 (ஞாயிறு) - விடுமுறை | |||
| 22-06-2026 (திங்கள்) | 06.30 PM - 08.00 PM | குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை | குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை |
| 23-06-2026 (செவ்வாய்) | 06.30 PM - 08.00 PM | தமிழ் | தமிழ் |
| 24-06-2026 (புதன்) | 06.30 PM - 08.00 PM | ஆங்கிலம் | ஆங்கிலம் |
| 25-06-2026 (வியாழன்) | 06.30 PM - 08.00 PM | கணிதம் | கணிதம், சமூக அறிவியல் |
| 26-06-2026 (வெள்ளி) | 06.30 PM - 08.00 PM | அறிவியல், சமூக அறிவியல் | அறிவியல், சமூக அறிவியல் |
| 27-06-2026 (சனி) மற்றும் 28-06-2026 (ஞாயிறு) - விடுமுறை | |||
| 29-06-2026 (திங்கள்) | 06.30 PM - 08.00 PM | கூடுதல் | தேவைப்படின் |
| 30-06-2026 (செவ்வாய்) | 06.30 PM - 08.00 PM | கூடுதல் | தேவைப்படின் |
குறிப்பு: சமூக அறிவியல் பாடத்திற்கான பயிற்சி வகுப்பு அதே நேரத்தில் மற்றொரு தனி YouTube லிங்க் வாயிலாக நடைபெறும்.
0 Comments