தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதன்மைத்
தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிப்பு - 2026
தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம்
அறிவிப்பு - 2026
தமிழ் நாடு அரசானது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம்: (UPSC) நடத்தும் குடிமைப்
பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்
வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை
செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி குடிமைப்பணி /இந்திய வனப்பணி
முதன்மைத் தேர்வுகளுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக முதல்நிலைத் தேர்வில்
தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25,000 ரூபாய் நேரடியாக
மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யு.பி.எஸ்.சி குடிமைப்பணி
/ இந்திய வனப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த
மாணவர்கள். ஆன்லைன் மூலம் (https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc
registration/) 19.06.2026 முதல் 30.06.2026 வரை விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments