10th SSLC Provisional Marksheet Correction 2026: DGE Official Guidelines

 



10-ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திருத்தங்கள் 2026

அரசுத்தேர்வுகள் இயக்ககம், சென்னை-6

📅 நாள்: 27.05.2026
📄 குறிப்பு எண்: 013061/01/2025
🎯 பொருள்: மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் (Provisional Mark Certificate) திருத்தங்கள் மேற்கொள்ளுதல் தொடர்பாக.
சான்றிதழ் பதிவிறக்கம் குறித்த முந்தைய அறிவுறுத்தல்

முன்னதாக 21.05.2026 நாளிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள்:

  • மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்களுக்கு 22.05.2026 அன்று பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Mark Certificate) வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
  • அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID மற்றும் PASSWORD-ஐக் கொண்டு இதனைப் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
🛠️ சான்றிதழ் பிழைகளை திருத்துவதற்கான வழிமுறைகள்

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் பிழைகள் ஏதேனும் இருப்பின், தலைமையாசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்:

  • தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இரு நகல்கள் (Two copies) எடுக்க வேண்டும்.
  • தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு (Attest), அதில் ஒரு நகலை மாணவர்களுக்கு அளித்திட வேண்டும்.
  • மற்றொரு நகலை தலைமையாசிரியர் வசம் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த மற்றொரு சான்றிதழ் நகலினை சம்மந்தப்பட்ட தேர்வர்களின் மாற்றுச்சான்றிதழ் (Transfer Certificate - TC) நகலுடன் இணைக்க வேண்டும்.

⏳ முக்கிய காலக்கெடு (Deadline for Submission)

அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலினை சம்பந்தப்பட்ட தேர்வர்களின் மாற்றுசான்றிதழ் (TC) நகலினை இணைத்து, திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக 04.06.2026-க்குள் சம்பந்தப்பட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

👥 கல்வி அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள்

🏫 முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEOs)

இணை இயக்குநர்(கல்வி), புதுச்சேரி மற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த விவரங்களை அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🏢 உதவி இயக்குநர்கள் (Assistant Directors)

அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டிய சான்றிதழ் நகலினை பெற்று தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இயக்ககத்தால் அறிவிக்கப்படும் நாட்களில் ஆன்லைனில் (Online) திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments