லோக் பவன், தமிழ்நாடு - செய்தி வெளியீடு
திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (9.5.2026) லோக் பவனில் தமிழ்நாடு மாண்புமிகு ஆளுநரை சந்தித்து, தமிழக வெற்றி கழக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து தெரிவிக்கும் கடிதத்தை சமர்பித்தார்.
தனது தலைமையின் கீழ் அரசாங்கம் அமைக்க ஆதரவு தெரிவித்து கடிதம் சமர்ப்பித்த கூட்டணிக் கட்சிகள்:
தமிழ்நாடு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக நியமித்து, அமைச்சரவை அமைக்க அவரை அழைத்துள்ளார்.
மாண்புமிகு ஆளுநர் அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளவரை, 13 மே 2026 அன்று அல்லது அதற்கு முன் சட்டமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பை பெறுமாறு உத்தரவிட்டுள்ளார்.
🏛️ பதவியேற்பு விழா
நாள்: 10 மே 2026 | நேரம்: காலை 10:00 மணி
இடம்: சென்னை நேரு விளையாட்டரங்கம்
0 Comments