+2 பொதுத்தேர்வு மார்ச் 2026: மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் & விடைத்தாள் நகலுக்கு (Scan Copy) விண்ணப்பிக்கும் முறை!


+2 விடைத்தாள் நகலுக்கு (Scan Copy) விண்ணப்பித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செய்திக் குறிப்பு!

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை

அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பை (Scan Copy Application Instructions) பதிவிறக்கம் செய்ய:

📥 Click here to Download PDF

I. மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்

  • பள்ளி மாணவர்கள்: மார்ச் - 2026 பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) 13.05.2026 அன்று காலை 11.00 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம்.
  • தனித்தேர்வர்கள்: தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification HSE -II Year March-2026 - Statement of Marks), தங்களின் பிறந்த தேதி மற்றும் பதிவெண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

II. விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பம் செய்தல்

  • விண்ணப்பிக்கும் முறை: விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
  • முக்கிய தேதிகள்: 12.05.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணி முதல் 16.05.2026 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
  • Arrear மாணவர்கள்: +1 Arrear தேர்வர்களும் விடைத்தாள் நகல் கோரி மேற்கண்ட நாட்களில் விண்ணப்பிக்கலாம்.
  • கட்டணம்: விடைத்தாள்களின் நகலினைப் பெறுவதற்கான கட்டணம் ரூ.275/- ஆகும். இக்கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

முக்கிய குறிப்புகள்:

  • விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
  • விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் குறித்து ஊடகங்கள் மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.
  • விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.

Post a Comment

0 Comments