ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை (Special Grade) வழிகாட்டுதல்கள்
2003-04, 2004-05, 2005-06 தொகுப்பூதிய நியமன ஆசிரியர்களுக்கானது
🎉 20 ஆண்டுகள் பணிக்காலம் நிறைவு 01/06/2026
அன்பான ஆசிரியர்களே,
01/06/2006 அன்று பணி வரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்கள் இன்றுடன் 20 ஆண்டுகள் பணிக்காலத்தை நிறைவு செய்கிறீர்கள். நாளை (01/06/2026) அதே பதவியில் இருப்பவர்களுக்கு சிறப்பு நிலை (SPL Grade) வருகிறது. இதற்கான கருத்துருக்கள் மற்றும் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
📝 கருத்துருக்கள் (Proposals)
- ✅ படிவம் (Form)
- ✅ பதிவுத் தாள் (Record Sheet)
- ✅ பணிக் கால கணக்கீட்டு தாள்
- ✅ பணிக் கால சரிபார்ப்பு விவரங்கள்
- ✅ விடுப்பு விவரங்கள்
- ✅ போராட்டத்தில் பங்கேற்பு / முறைப்படுத்தப்பட்ட விவரங்கள்
- ✅ Special Report (சில மாவட்டங்களில் மட்டும் கேட்கப்படுகிறது)
- ✅ ஒருங்கிணைந்த சான்று
- ✅ சார்ந்த ஆசிரியர் விண்ணப்பம் 🙏
🏫 HM வழியாக சமர்ப்பிக்க வேண்டியவை
- 📌 HM Covering Letter
- 📌 அசல் பணிப் பதிவேடு (Original SR)
- 📌 ஆசிரியர் விண்ணப்பம்
- 📌 கருத்துருக்கள் (ஒன்று மட்டும் போதும்)
- 📌 தேவையான இணைப்புகள் (Enclosures)
💡 குறிப்பு: தட்டச்சு படிவம் (Typed form) தான் வேண்டும் என்று கிடையாது. Empty form-ல் கையால் எழுதி கூட தயாரிக்கலாம்.
📁 இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
- 📄 SR Page 1 & 2
- 📄 நியமன ஆணை & SR Entry Page
- 📄 பணி வரன்முறை ஆணை & SR Entry Page
- 📄 தகுதி காண் பருவம் ஆணை & SR Entry Page
- 📄 தேர்வு நிலை ஆணை & SR Entry Page
- 📄 SSLC Mark Sheet & SR Entry Page
- 📄 HSC Mark Sheet, Genuineness & SR Entry Page
- 📄 UG Convocation, Genuineness & SR Entry Page
- 📄 PG Convocation, Genuineness & SR Entry Page
- 📄 B.Ed Convocation, Genuineness & SR Entry Page
* SSLC முதல் B.Ed வரை Genuineness SR-ல் ஒரு பக்கத்தில் பதிவு செய்து இருந்தால் ஒரு முறை வைத்தால் போதும்.
⭐ சிலருக்கான கூடுதல் ஆவணங்கள்
- 🔹 SSLC/HSC-ல் தமிழ் படிக்காதவர்கள், TNPSC Second Class Lang Test Pass Details & SR Entry Page.
- 🔹 Other State Degree எனில் Evaluation (மதிப்பீடு) by DEO ஆணை & அதன் SR Entry Page.
📜 அரசாணை விவரம்:
அரசாணை 151 (பகது) நாள்: 09/09/2022-ன்படி, உயர்நிலை / மேல்நிலைப் பள்ளியில் PET / SGT / BT / PG-க்கு தேர்வு நிலை/ சிறப்பு நிலை வழங்கும் அதிகாரம் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர் (இ.நி) அவர்களுக்கு தான் உள்ளது.
அரசாணை 151 (பகது) நாள்: 09/09/2022-ன்படி, உயர்நிலை / மேல்நிலைப் பள்ளியில் PET / SGT / BT / PG-க்கு தேர்வு நிலை/ சிறப்பு நிலை வழங்கும் அதிகாரம் சார்ந்த மாவட்ட கல்வி அலுவலர் (இ.நி) அவர்களுக்கு தான் உள்ளது.
📊 குறைந்த உள்ளீடு செய்து தங்களது கருத்துருக்களை எளிதாகத் தயாரிக்க...
📥 Download All forms in one
* இந்த Excel File-ஐ பயன்படுத்தி தட்டச்சு செய்யும் நேரத்தை மிச்சப்படுத்துங்கள்!
🏢 சிறப்பு முகாம் நடைபெற உள்ளது!
1/6/2026-ல் அதிக அளவில் ஆசிரியர்கள் சிறப்பு நிலை பெற உள்ளதால், மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தல் படி கல்வி மாவட்ட அளவில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தங்களின் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இந்த பதிவு.
0 Comments