TNPSC & TET Tamil Model Test 5 (50 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 5

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 8-ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் (01 - 04 இயல்கள்)
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. "சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் புகழ்ந்தவர் யார்?
2. “உயிரும் நீ; மெய்யும் நீ அறமாம் பயிரும் நீ; இன்பம் நீ; அன்புத் தருவும் நீ;..... யாவும் நீயே” என்று தமிழைப் போற்றிப் பாடியவர் யார்?
3. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.
1. இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும்.
2. இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும்.
3. உலகத்துப் பொருள்களை ஐந்திணைகளாகவும் முப்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ் மொழியின் மரபாகும்.
4. மரபுச் சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும். இம்மரபை மீறினால் பொருள் மாறிவிடும்.
4. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தியதைத் தேர்வு செய்க.
5. கீழ்க்கண்டவற்றுள் மதுரைக்கு அருகில் கீழடியில் கிடைத்தவை எவை?
6. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க.
i. தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது.
ii) கல்வெட்டுகள் கி.மு. (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
iii) செப்பேடுகள் கி.பி. (பொ.ஆ.பி) ஆறாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
iv) கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.
7. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க.
i) கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன.
ii) கண்ணெழுத்து குறித்த செய்தியை மணிமேகலையில் இடம்பெறும் “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" என்னும் தொடரால் அறியலாம்.
8. "கூம்பொடு மீப்பாய் களையாது” - என்ற புறநானூற்று வரி குறிப்பிடுவது.
9. எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் யாருடைய காலம் முதல் இருந்து வந்துள்ளது?
10. கீழ்க்காணும் எந்தக் கல்வெட்டின் மூலம் தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என அறியலாம்?
11. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமையைப் புரிபவன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
12. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க. (இரா.இளங்குமரனார்)
1. இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
2. தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.
3. திருவள்ளுவர் தவச்சாலையையும், பாவாணர் நூலகத்தையும் திருச்சி அருகே அல்லூரில் அமைத்துள்ளார்.
13. நாவின் இடைப்பகுதி, நடுஅண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும் இருமெய்களைக் காண்க.
14. பொருத்துக.
a. ப்,ம் - 1. மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால்
b. வ - 2.மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால்
c. ர்,ழ் - 3.மேல் வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால்
d. ல்,ள் - 4.மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுவதால்
15. பழைய தமிழெழுத்துகள் யாருடைய ஆட்சிக் கால கல்வெட்டுகளில் காணப்படுகின்றன?
16. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.
(i) வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்கிற எத்திராசலு
(ii) தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்.
(iii) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்.
(iv) கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப் பெயர்களைப் பெற்றவர்.
17. பொருத்துக.
a. சம்பிரமுடன் - 1. சரியாக
b. சேகரம் - 2.சேதம்
c. வின்னம் - 3. கூட்டம்
d. வாகு - 4. முறையாக
18. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.
(i) நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாகப் பாடினர்.
(ii) பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப் பாடல்கள் 'பஞ்சக் கும்மிகள்' என்று அழைக்கப்பட்டன.
(iii) புலவர் செ.ராசு தொகுத்த பஞ்சக் கும்மிகள் என்னும் நூலில் வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய கோணக்காத்துப் பாட்டு என்னும் பாடல் இடம்பெற்றுள்ளது.
19. பொருத்துக. (சுகுவாமிஷ் பழங்குடியினர்)
a. மலர்கள் - 1. உடன்பிறந்தவர்கள்
b. மான்கள் - 2. தந்தை
c. ஆறுகள் - 3. சகோதரிகள்
d. வானம் - 4. சகோதரர்கள்
20. "தமிழகப் பழங்குடிகள்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
21. காடர்கள் தாங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்?
22. கூற்று : சுகுவாமிஷ் பழங்குடியின மக்கள் இந்தப் பூமியை எப்போதும் மறப்பதில்லை.
காரணம் : இந்தப் பூமியே அவர்களுக்குத் தாயாகும்.
23. பொருத்துக.
a. வியங்கோள் வினைமுற்று - 1. கரியன்
b. குறிப்பு வினைமுற்று - 2. நில்
c. ஏவல் வினைமுற்று - 3. பானை வனைந்தான்
d. தெரிநிலை வினைமுற்று - 4. வாழ்க
24. அகர வரிசைப்படுத்துக.
25. பொருத்துக.
a. உவசமம் - 1. ஒளிபொருந்திய
b. நிழல் இகழும் - 2. தன்மையுடையன
c. பேர்தற்கு - 3. அடங்கி இருத்தல்
d. திறத்தன - 4. அகற்றுவதற்கு
26. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க.
1. நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
2. நீலகேசி சமண சமய கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
3. நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பதின்மூன்று சருக்கங்களைக் கொண்டது.
4. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான நீலகேசியின் ஆசிரியர் தோலாமொழித் தேவர்.
27. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க.
1. கவிமணி தேசிக விநாயகனார், குமரி மாவட்டம், நாகர்கோவிலில் பிறந்தவர்.
2. முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
3. ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம் போன்ற பல கவிதை நூல்களை இயற்றியுள்ளார்.
4. ‘உமர்கய்யாம் பாடல்கள்’ என்னும் மொழிப்பெயர்ப்பு நூலைப் படைத்துள்ளார்.
28. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க?
(i) தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசிவகம், போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.
(ii) தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறாக ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும், பாட்டிவைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த வைத்தியமாகவும் பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.
29. கீழ்க்கண்டவற்றுள் தமிழர் மருத்துவத்தின் முதல் சிறப்பு எது?
30. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க.
(i) பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் இது மூன்று காலத்திலும் வரும்.
(ii) செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் ஆகும்.
(iii) செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
31. கீழ்க்காணும் கூற்றுகளைக் காண்க.
(i) குமரகுருபரரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
(ii) நீதிநெறி விளக்கம் மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக் காட்டுவதால் நீதிநெறி விளக்கம் எனப் பெயர்பெற்றது.
(iii) நீதிநெறி விளக்கம் கடவுள் வாழ்த்து உட்பட 103 வெண்பாக்களைக் கொண்டது.
32. 'முற்ற' என்னும் சொல்லின் பொருள் யாது?
33. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
34. கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும், மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும். இக்கூற்று யாருடையது?
35. "மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா" - இவ்வரியைப் பாடியவர் யார்?
36. இயற்கைத் தவம் என அழைக்கப்படும் நூல் எது?
37. ஒரு பெயரைச் செயப்படுப்பொருளாக வேறுபடுத்திக் காட்டும் வேற்றுமை எது?
38. சேக்கிழார் எந்த நூலை முதல் நூலாகக் கொண்டு பெரியபுராணம் படைத்தளித்தார்?
39. கீழ்க்கண்டவற்றுள் சரியானதைத் தேர்வு செய்க?
1. சுந்தரர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
2. சுந்தரர் அருளிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளாக வைக்கப்பட்டுள்ளது.
3. கேதாரப்பதிகப்பாடல் பாடியவர் - சுந்தரர்.
4. பதிகம் என்பது நூறு பாடல்களைக் கொண்டது.
40. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?
41. ”வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று" - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி யாது?
42. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1.தே + ஆரம் - இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை
2.தே + வாரம் - இனிய இசை பொருந்திய பாடல்கள்
43. திட்டுமுட்டு என்ற சொல்லின் பொருள்?
44. "கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்” - இக்குறள் எவ்வதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது?
45. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. கோணக்காத்து வீசியதால் வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம் பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
2. கொங்கு மண்டலத்தின் 22 நாடுகளுள் ஒன்று காங்கேய நாடு.
46. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் சொற்களின் மொத்த எண்ணிக்கை 42 என்று நன்னூலார் குறிப்பிடுகின்றார்.
2. அவற்றுள் எட்டு குறில் எழுத்துக்களும் அடங்கும்.
47. சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியவைகளுள் அல்லாதது எது?
48. "நெட்டெழுத்து ஏழே ஒரெழுத்து ஒரு மொழி” என்பவர் யார்?
49. பொருத்துக.
a) வழாஅமை 1. தவறாமை
b) மயக்கம் 2. கலவை
c) விசும்பு 3. வானம்
d) தழாஅல் 4. தழுவுதல்
50. வேறுபாடானதை தேர்ந்தெடு:

📊 Your Final Score

0 / 50

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments