TNPSC & TET Tamil Model Test 4 (50 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 4

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 7-ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் (இயல் 05 முதல் இயல் 09 வரை)
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. பொருந்தியதைத் தேர்க.
2. பொருந்தாததைத் தேர்க.
3. பொருத்துக.
a) பெயர்ப் பகாப்பதம் - 1. வாழ்
b) வினைப் பகாப்பதம் - 2. மன்
c) இடைப் பகாப்பதம் - 3. நனி
d) உரிப் பகாப்பதம் - 4. நெருப்பு
4. பொருந்தாததைத் தேர்க.
5. தம் குழந்தைக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வியே ஆகும் என்று கூறும் நூல் எது?
6. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும்.
2. வினைப்பகுபதத்தின் பகுதி கட்டளையாகவே அமையும்.
3. பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு ஆகும்.
7. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணை எத்தனை?
அ) குறிக்கோள் - Objective
ஆ) செல்வம் - Wealth
இ) ஒப்புரவுநெறி - Courtesy
ஈ) நற்பண்பு - Reciprocity
உ) கடமை - Responsibility
8. இன்பத் தமிழை அனைவரும் கற்றவர்கள் என்னும் நிலை ஏற்படும் போது என்னென்ன ஏற்படும் என்று பாரதிதாசன் குறிப்பிடுகிறார்?
1. செல்வங்கள் பெருகிவிடும்
2. துன்பங்கள் நீங்கிவிடும்
3. நெஞ்சில் தூய்மை உண்டாகிவிடும்
4. மருள் விலகும்
5. வீரம் வரும்
9. "பள்ளித் தலமனைத்தும் கோவில் செய்குவோம்” என்று பாடியவர் யார்?
10. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. தமிழில் ஓரெழுத்து ஒருமொழி மொத்தம் நாற்பத்திரண்டு உள்ளன என பவணந்தி முனிவர் குறிப்பிட்டுள்ளார்.
2. அவற்றுள் நொ, து ஆகிய இரண்டு சொற்களைத் தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.
11. வேறுபாடானதைக் கண்டறி.
12. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. பாரதியார்தான் கருத்துப்படத்தை முதன் முதலில் இந்தியா இதழில் அறிமுகப்படுத்தினார்.
2. நாட்காட்டி ஓவியங்களை கலம்காரி ஓவியங்கள் என்றும் அழைப்பர்.
13. வேறுபாடானதைக் கண்டறி.
14. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதோர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.
2. துணி ஓவியங்களை கலம்காரி ஓவியங்கள் என்ற பெயரில் தமிழகத்திலும் ஆந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வருகின்றனர்.
3. இராஜா ரவிவர்மா பாணி ஓவியங்கள் பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன.
4. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் கொண்டைய ராஜூ.
15. 'மடமகள்' என்பதன் பொருள் யாது?
16. கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானதைத் தேர்க.
17. இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகளாக திகழக்கூடிய ஓவியம் எது?
18. பொருத்துக.
a) அறுவடை - 1. Irrigation
b) நீர்ப்பாசனம் - 2. Harvest
c) நெற்பயிர் - 3. Cultivation
d) பயிரிடுதல் - 4. Paddy
19. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. தொழிற்பெயர் படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.
2. தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டும்.
3. தொழிற்பெயரை விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலை தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் என வகைப்படுத்துவர்.
4. பேறு என்பது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
20. கீழ்க்கண்ட பாரதிதாசனின் கவிதைக் கூற்றுகளில் தவறானதைத் தேர்க.
21. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. தமிழ்ப் பல்கலைக்கழகம் 1982 இல் தஞ்சையில் தோற்றுவிக்கப்பட்டது.
2. இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய வேண்டும் என்பதே தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நோக்கம்.
22. "திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே” - இவ்வடிகள் யாருடையது?
23. சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே! என்று பாடியவர் யார்?
24. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது இல்பொருள் உவமையணி.
2. இனிப்பு தின்றான் என்பது தொழிலாகுபெயர்.
25. "காளை கொம்பு முளைத்த குதிரை போல் பாய்ந்து வந்தது” - இத்தொடரில் எவ்வகை அணி பயின்று வந்துள்ளது?
26. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. வள்ளுவர் கோட்டம் சென்னைக் கோடம்பாக்கத்தில் உள்ளது.
2. வள்ளுவர் கோட்டத்தில் அறத்துப்பால் வெண்ணிற பளிங்குக் கல்லிலும் பொருட்பால் கருநிறப் பளிங்குக் கல்லிலும் இன்பத்துப்பால் செந்நிறப் பளிங்குக் கல்லிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
27. "வையம் தகளியா வார்கடலே நெய்யாக.....” எனத் தொடங்கும் நாலாயிரத்திவ்வியப்பிரபந்தப் பாடலில் பயின்றுவந்துள்ள அணி யாது?
28. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு.
2. மக்கள் பணியையே இறைப்பணியாக எண்ணித்தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
3. திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் குன்றக்குடி அடிகளார்.
29. தவறானதைத் தேர்ந்தெடு.
30. சரியான கூற்றை ஆய்க.
1. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு - பாளையங்கோட்டை
2. தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் பாளையங்கோட்டையும் கிழக்கு கரையில் திருநெல்வேலியும் அமைந்துள்ளன.
3. இரட்டை நகரங்கள் - பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
4. முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது.
31. குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்தியவர் யார்?
32. வேறுபாடானதைக் கண்டறி.
33. உலகம் உண்ண உண்: உடுத்த உடுப்பாய் என்று கூறியவர்?
34. கீழ்க்காண்பனவற்றுள் தவறானதைக் காண்க.
1. முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது.
2. முனைப்பாடியார் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணப்புலவர்.
3. ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடைமை நெறியே திருவள்ளுவரின் வாழும் நெறி.
4. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு.
35. "வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் ; வாழ்க்கை பாலைவனம் - அவர் தூய மனத்தில் வாழ நினைத்தால் எல்லாம் சோலைவனம்” என்பது யாருடைய பாடலடி?
36. "தண்பொருநை புனல் நாடு” என்று திருநெல்வேலியின் சிறப்பினை போற்றியவர் யார்?
37. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் -இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
38. பொருத்துக.
a) அன்பு - 1. நெய்
b) ஆர்வம் - 2. தகளி
c) சிந்தை - 3. விளக்கு
d) ஞானம் - 4. இடுதிரி
39. காயிதே மில்லத் (முகம்மது இஸ்மாயில்) அவர்களை “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது அவர் நல்ல உத்தமமான மனிதர்" என்று கூறியவர் யார்?
40. ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதி ----------- எனப்படும்.
41. கூற்று 1: முற்காலத்தில் திருநெல்வேலிக்கு "வேணுவனம்" என்னும் பெயரும் இருந்துள்ளது மூங்கில்காடு என்பது இதன் பொருளாகும்.
கூற்று 2: கிரேக்க, உரோமபுரி நாடுகளை சேர்ந்தவர்களான யவனர்கள் முத்துக்களை விரும்பி வாங்கி சென்றனர்.
42. பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர் கொண்டு வரவேற்ற இடம் எது?
43. இருபருவங்களில் நெல் பயிரிடக்கூடிய மாவட்டம்?
44. பொருந்தாததைத் தேர்க.
45. 1. குற்றாலக் குறவஞ்சி உண்மையான தமிழ்ப் பண்பும், கவிப்பண்பும் வாய்ந்தது.
2. இருநூறு வருஷங்களுக்கு முன் குற்றாலத்துக்கு கிழக்கே இரண்டு மைலில் உள்ள மேலகரத்தில் வாழ்ந்த திரிகூடராசப்பகவிராயர் பாடிய நூல்.
46. திருநெல்வேலி சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய ------------- மற்றும் ------------ மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும்?
47. பொருத்துக:
a. திருப்புகழ் - 1. அண்ணாமலையார்
b. காவடிச்சிந்து - 2. பிள்ளைப்பெருமாள்
c. ஸ்ரீவைகுண்டம் - 3. சீதக்காதி
d. காயல்பட்டினம் - 4. அருணகிரிநாதர்
48. கடையேழு வள்ளகளில் ஒருவரான பாரியின் புதல்வியர் பாணர்களுக்கு புதுமையான உணவு அளித்த செய்தியை கூறும் நூல் எது?
49. கூற்று 1: கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று எண்ணியவர் காயிதே மில்லத்.
கூற்று 2: அவர் சார்ந்த இயக்கத்தின் சார்பாக அவருக்கு ஒரு மகிழுந்தும் பெருந்தொகையும் பரிசளிக்கப்பட்டன. அவற்றைத் தான் பயின்ற கல்லூரியில் பயன்பாட்டிற்கு அளித்துவிட்டார்.
50. கன்னட மொழியிலிருந்து பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர்?

📊 Your Final Score

0 / 50

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments