TNPSC & TET Tamil Model Test 25 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 25

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 10 ஆம் வகுப்பு - புதிய புத்தகம் - இயல் - 08
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. கடையெழு வள்ளல் எழுவரின் கொடைப் பெருமை பற்றி குறிப்பிடும் நூல் எது?
2. "இம்மைச் செய்தது மறுமைக்கும் ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்” என்று சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி குறிப்பிட்டவர் யார்?
3. அறமும் அரசியலும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
4. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. கண்ணதாசன் இயற்பெயர் முத்தையா.
2. "கலங்காதிரு மனமே" என்ற பாடல் 1946-ம் ஆண்டு இவரால் எழுதப்பட்டது.
3. தம் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
4. கண்ணதாசன் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற ஆண்டு - 1980
5. பொருத்துக.
a. Renaissance - 1. மீட்டுருவாக்கம்
b. Philosopher - 2. நம்பிக்கை
c. Revivalism - 3. மறுமலர்ச்சி
d. Belief - 4. மெய்யியலாளர்
6. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை கூறியவர் யார்?
7. "கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே” என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
8. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. "அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்று அறம் கூறும் அவையம் பற்றி அகநானூறு கூறுகிறது.
2. உறையூரிலிருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
9. "கூர்வேல் குவைஇய மொய்ம்பின் தேர்வண் பாரிதண் பறம்பு நாடே" - அடிக்கோடிட்டுள்ள ஊர் தற்போது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? (பறம்பு நாடே)
10. பொருத்துக.
a. துள்ளல் ஓசை - 1. வஞ்சிப்பா
b. தூங்கல் ஓசை - 2. வெண்பா
c. செப்ப லோசை - 3. கலிப்பா
d. அகவலோசை - 4. ஆசிரியப்பா
11. "நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை” என்று கூறும் நூல் எது?
12. கீழ்க்காணும் கூற்றுகளால் குறிப்பிடப்படும் கவிஞர் யார்?
1. திருவையாற்றில் பிறந்தவர்.
2. 'மீட்சி விண்ணப்பம்' என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர்.
3. 'எழுத்து' காலப் புதுக்கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.
13. கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானவற்றைத் தேர்வு செய்க.
1. யாப்பு ஆறு உறுப்புகளைக் கொண்டது.
2. பாக்கள் நான்கு வகைப்படும்.
3. ஓசை மூன்று வகைப்படும்.
14. 'மாற்றம் எனது மானிடத் தத்துவம் மாறும் உலகத்தின் மகத்துவம் அறிவேன்" - என்ற கவிதை வரிகளை இயற்றியவர் யார்?
15. கீழ்க்கண்ட எந்த நூலுக்காக கண்ணதாசன் சாகித்திய அகாதமி விருது பெற்றார்?
16. "அறப்பணி ஒய்வதில்லை ஓய்ந்திடில் உலகமில்லை “ என்ற கவிதை வரிகளை இயற்றியவர் யார்?
17. கிழ்க்கண்ட கூற்றுகளைக் ஆராய்க.
1. இருவர் உரையாடுவது போன்ற ஓசை அகவலோசை
2. சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை செப்பலோசை
18. எந்த சமயத்திலிருந்து உருவான “ஜென் தத்துவத்தை“ போதிதர்மர் போதித்தார்?
19. கீழ்கண்ட கூற்றுகளைக் ஆராய்க.
1. நாளுக்கு ஒருமுறை மலர்வது சண்பகம்.
2. ஆண்டுக்கு ஒருமுறை மலர்வது பிரம்ம கமலம்.
3. தலைமுறைக்கு ஒருமுறை மலர்வது மூங்கில்.
20. எண்ணங்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
21. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் - ஒளவையார்.
2. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு - நச்செள்ளையார்.
3. பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் - கபிலர்
22. "நதியின் பிழையன்று நறும்புனலின்மை அன்றே” என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
23. 'போதிதர்மர்' வாழ்ந்த காலம்?
24. கீழ்க்கண்ட கூற்றுகளுள் சரியானவற்றைத் தேர்வு செய்க.
1. பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி உதவுதல் பற்றிக் குறிப்பிடுபவர் நல்லந்துவனார்.
2. உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான் என்கிறார் நல்வேட்டனார்.
25. ”செல்வத்துப் பயனே ஈதல்” என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளைப் பாடியவர் யார்?

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments