TNPSC & TET Tamil Model Test 23 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 23

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 10 ஆம் வகுப்பு - புதிய புத்தகம் - இயல் - 06
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. எவை இரண்டையும் இடைவிடாமல் பின்பற்றுபவரின் குடி உயர்ந்து விளங்குமென வள்ளுவர் கூறுகிறார்?
2. பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் என வள்ளுவர் எதை குறிப்பிடுகிறார்?
3. "செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்” -என்னும் செங்கீரை பருவப்பாடல் எங்கு எழுந்தருளி இருக்கும் இறைவனை பாட்டுடைத்தலைவகானக் கொண்டு பாடப்பட்து?
4. 'தேவதுந்துபி' என அழைக்கப்படும் இசைக்கருவி எது?
5. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. தேவராட்டத்தில் பெரும்பான்மையாக எட்டு முதல் பதின்மூன்று கலைஞர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்பது பொது மரபாக உள்ளது.
2. தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருவது பொய்க்கால் குதிரையாட்டம்.
6. மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படும் கலை எது?
7. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
கூற்று 1: "நீரற வறியாக் கரகத்து" - அகநானூறு.
கூற்று 2: சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் கரகாட்டத்திற்கு அடிப்படையான 'குடக்கூத்து' பற்றிய குறிப்பு உள்ளது.
8. பொருத்துக
a) பொய்க்கால் குதிரையாட்டம் - 1. கரகாட்டம்
b) தப்பாட்டம் - 2. உறுமி
c) கும்பாட்டம் - 3. புரவியாட்டம்
d) தேவராட்டம் - 4. தோற்கருவி
9. கீழ்க்கண்ட எந்த கலையினை கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ?
10. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என அழைக்கப்படும் ஆடல் வகை பொய்க்கால் குதிரையாட்டம்
2. பொய்க்கால் குதிரையாட்டம் இராஜஸ்தானில் குதிரைக்களி என்றும், கேரளாவில் கச்சிகொடி என்று அழைக்கப்படுகிறது.
11. கீழ்க்காணும் கூற்றுகளால் குறிப்பிடப்படும் ஆட்டம் எது?
1. இரு வரிசையாக நின்று ஆடும் ஆட்டம்.
2. ஆண்கள் ஆடுவதே வழக்கமாக உள்ளது.
3. முண்டாசு கட்டி, சலங்கை அணிந்து, கையிலுள்ள சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடும் ஆட்டம்.
12. கலைஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்?
13. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. பிள்ளைத்தமிழ் 96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று.
2. இதில் இறைவனையோ, தலைவரையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவரைக் குழந்தையாக பாவித்துப் பாடுவர்.
3. பொதுப்பருவங்கள் ஏழு ஆகும். இதில் ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கான கடைசி மூன்று பருவங்கள் சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
14. நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை உள்ளிட்ட நூல்களை இயற்றியவர் யார்?
15. சிதம்பரத்தில் கிடைக்கப் பெற்றுள்ள சேயுடன் மகிழ்ந்து குலாவும் தாயின் ஒவியம் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது?
16. பொருத்துக.
a) சுட்டி - 1. காதில் அணிவது
b) குழை - 2. காலில் அணிவது
c) பண்டி - 3. நெற்றியில் அணிவது
d) கிண்கிணி - 4. வயிறு
17. கீழ்க்காணும் கூற்றுகளால் குறிப்பிடப்படும் பருவம் எது?
1. குழந்தையின் ஐந்து முதல் ஆறாம் மாதத்தில் நிகழும்.
2. குழந்தை தன் இருகை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி தலைநிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.
18. பொருத்துக.
a) மார்கழி, தை - 1. பின்பனிக்காலம்
b) ஐப்பசி, கார்த்திகை - 2. முன்பனிக்காலம்
c) ஆனி, ஆடி - 3. குளிர்காலம்
d) மாசி, பங்குனி - 4. முதுவேனிற்காலம்
19. "மாதவி வேலிப்பூக வனம்தோறும் வயல்கடோறும்” இவ்வடி பயின்று வரும் நூல் எது?
20. "ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான்” என்னும் செய்யுளடி இடம்பெற்ற நூல் எது?
21. "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று கம்பரை புகழ்ந்தவர் யார்?
22. கம்பராமாயணத்தின் நாட்டுப் படலம் கீழ்க்கண்ட எந்த காண்டத்தில் இடம் பெற்றுள்ளது?
23. "தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான்“ - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?
24. சிறு பொழுதுகளைப் பொருத்துக.
a. முல்லை - 1. எற்பாடு
b. நெய்தல் - 2. யாமம்
c. மருதம் - 3. வைகறை
d. குறிஞ்சி - 4. மாலை
25. "விசாரணைக் கமிஷன்" என்ற புதினம் யாருடையது?

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments