TNPSC & TET Tamil Model Test 22 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 22

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 10-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் - 5
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் கீழ்க்கண்ட எந்த காண்டத்தில் அமைந்துள்ளது?
2. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று கூறியவர் யார்?
3. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க. (செய்குதம்பிப் பாவலர்)
1. சதம் என்றால் நூறு என்று பொருள்.
2. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
3. 1907 மார்ச் 8-ல் சென்னை விக்டோரியா அரங்கத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி 'சதாவதானி' என்று பாராட்டுப்பெற்றவர்.
4. இவர் நினைவை போற்றும் வகையில் இடலாக்குடியில் மணிமண்டபமும், நூலகமும் உள்ளன.
4. "காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப்பேசி மகிழ் நிலை வேண்டும்" என்று கூறியவர் யார்?
5. கீழ்க்கண்டவற்றுள் இனமொழி விடை எது?
6. பிரான்சு தேசிய நூற்கூடத்திலுள்ள தமிழ் நூல்களின் பட்டியலில் இன்னும் அச்சிடப்படாத நூல்களாகத் தனிநாயகம் குறிப்பிடுவது எதனை குறிப்பிடுகிறார்?
1. மாணிக்கவாசகர் பிள்ளைத் தமிழ்
2. சரளிப்புத்தகம்
3. புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ்
7. "ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு" என்று கூறியவர்?
8. சரியாக பொருந்தாததை தேர்ந்தெடு (வால்காவிலிருந்து கங்கை வரை)
9. பொருத்துக.
a) தார் - 1. கடம்பவனம்
b) முனிவு - 2. சொல்லிய
c) நுவன்ற - 3. மாலை
d) நீபவனம் - 4. சினம்
10. பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்களுள் பொருந்தாது எது?
1. வேதாரண்யப் புராணம்
2. திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா
3. மதுரை பதிற்றுப்பத் தந்தாதி
4. தெய்வமணிமாலை
5. மதுரைக் கலம்பகம்
6. மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ்
11. சரியாக பொருந்தியதை காண்க.
1. சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று - தமிழில் எம்.பி.அகிலா
2. குட்டி இளவரசன் - தமிழில் வெ. ஸ்ரீராம்
3. ஆசிரியரின் டைரி - தமிழில் வல்லிக்கண்ணன்
12. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. திருவிளையாடற் புராணம் மூன்று காண்டங்களை உடையது.
2. திருவிளையாடற் புராணம் 64 படலங்களைக் கொண்டது.
3. பரஞ்சோதி முனிவர் 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
4. பரஞ்சோதி முனிவர் இயற்றிய நூல்களில் திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பாவும் ஒன்று
13. செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் எவ்வகை பொருள்கோள்?
14. புலவர் மோசிக்கீரனாருக்கு கவரி விசிய மன்னன் யார்?
15. "அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப்பார்த்தேன்; பேத்தி. நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே" என்னும் கவிதை யாருடையது?
16. பொருத்துக.
a. Emblem - 1. குறியீட்டியல்
b. Symbolism - 2. ஆய்வேடு
c. Intellectual - 3. சின்னம்
d. Thesis - 4. அறிவாளர்
17. "கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை“ இவ்வடிகளில் குறிப்பிடப்படும் நூல் எது?
18. "தணிந்தது" பகுபத உறுப்பிலக்கணம் தருக.
19. கீழ்கண்டவற்றுள் வடமொழிக் கதைகளை தழுவிப் படைக்கப்பட்ட நூல்களில் அல்லாதது எது?
20. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. Tele என்பது தொலை என்பதை குறிக்கிறது.
2. Telegraph என்பது தொலைவரி.
3. Telemetry என்பது படியெடுத்தல்.
4. Transact என்பது செயல்படுத்துதல்.
21. "கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்" -என்ற அடிக்கோடிட்ட சொல் யாரைக் குறிப்பிடுகிறது? (கேள்வியினான்)
22. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. ஒரு மொழி வளம்பெறவும் உலகத்துடன் உறவுகொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்; உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் - மணவை முஸ்தபா
2. மொழிபெயர்த்தல் என்ற தொடரை தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளார்.
3. "மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்"- புறநானூற்றுக் குறிப்பு.
4. இந்தியாவில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் சாகித்திய அகாதெமி, தேசிய புத்தக நிறுவனம் ஆகியவற்றின் மூலம் செய்யப்பட்டன.
23. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 3000 நூல்கள் வரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
2. ராகுல் சாங்கிருத்யாயன் அல்மோரா மத்திய சிறையிலிருந்த போது 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலை 1942-ல் கன்னட மொழியில் எழுதினார்.
24. "யாப்படி பலவினும் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது" - இவ்வடிகள் குறிக்கும் பொருள்கோள் எது?
25. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. வினா ஆறு வகைப்படும்.
2. விடை எட்டு வகைப்படும்
3. "நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு கால் வலிக்கும் என்று கூறுவது உற்றது உரைத்தல் விடை
4. ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா என்று நூலகரிடம் வினவுவது கொளல் வினா.

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments