TNPSC & TET Tamil Model Test 1 (50 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 1

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: தமிழ் - 6-ம் வகுப்பு புதிய புத்தகம் (இயல் 01 முதல் இயல் 04 வரை)
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. “வான்தோன்றி வளி தோன்றி நெருப்புத் தோன்றி மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி” எனத்தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
2. சிலப்பதிகாரத்தில் இயற்கையை வாழ்த்துவதாக அமைந்துள்ள பாடலில் கீழ்க்கண்ட எந்த வரிசையில் இளங்கோவடிகள் இயற்கையை வாழ்த்துகிறார்?
3. “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய ; இதுநீ கருதினை ஆயின்” என்னும் அடிகள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
4. பொருத்துக. (A. முடி, B. மீன், C. பார், D. கோடை)
5. சிலப்பதிகார வாழ்த்துப் பாடலில் இளங்கோவடிகள் சோழ மன்னனின் வெண்கொற்றக்குடையை எதனுடன் ஒப்பிடுகிறார்?
6. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.
2. உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
3. க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
4. உயிர்மெய் எழுத்துகளுள் ங எழுத்துவரிசை சொல்லின் இறுதியில் வராது.
7. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் பொருந்தாதது எது?
8. பாரதியாரின் உள்ளம் மகிழ்ந்திட எது வேண்டும் என்கிறார்?
9. பொருத்துக. (a. விளைவுக்கு, b. அறிவுக்கு, c. இளமைக்கு, d. புலவர்க்கு)
10. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. “என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” - பாரதியார்.
2. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” - பாரதிதாசன்.
3. தமிழில் நமக்குக் கிடைத்த பழமையான நூல் தொல்காப்பியம் ஆகும்.
4. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் இடஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
11. ‘விளக்குகள் பல தந்த ஒளி” என்னும் நூலை எழுதியவர் யார்?
12. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. ங வரிசையில் ங என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது.
2. ஞ வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
3. ய வரிசையில் ய, யா, யு, யௌ ஆகிய நான்கு எழுத்துகள் மட்டும் சொல்லின் முதலில் வரும்.
4. வ வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
13. கூற்று - ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.
காரணம் - ஆய்த எழுத்தானது முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குகிறது.
14. பொருத்துக. (a. இலக்கண நூல், b. சங்க இலக்கியம், c. அறநூல், d. காப்பியம்)
15. ‘தமிழன்’ என்னும் சொல் முதலில் எடுத்தாளப்பட்ட இலக்கியம் எது?
16. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. “தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என்நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்” - காசி ஆனந்தன்.
2. “பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும்” - பெருஞ்சித்திரனார்.
3. ’காக்கைக்குருவி எங்கள் சாதி’ - பாரதியார்.
17. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது? (அண்ணா நூற்றாண்டு நூலகம்)
18. கீழ்க்கண்ட எந்த ஆண்டு காமராசருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது?
19. கீழ்க்கண்டவற்றுள் காமராசரால் நடைமுறைப்படுத்தப்படாத திட்டம் எது?
20. மக்கள் கவிஞர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டவர் யார்?
21. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. கிழவனும் கடலும் என்ற ஆங்கிலப் புதினத்தின் ஆசிரியர் - எர்னெஸ்ட் ஹெமிங்வே.
2. The Old man and the Sea நோபல் பரிசு பெற்ற ஆண்டு - 1954.
22. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் வரலாறு, புவியியல், சுற்றுலா நூல்கள் உள்ளன.
2. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாம் தளத்தில் பழமையான ஓலைச்சுவடிகள் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
23. கீழ்க்கண்டவற்றுள் இன எழுத்து அல்லாதது எது?
24. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலாஜி எனப்படும்.
2. உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 21.
3. சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும்.
25. காமராசரைக் 'கல்விக் கண் திறந்தவர்’ என்று மனதாரப் பாராட்டியவர் யார்?
26. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. ‘கடற்கொள்ளைப் பறவை’ என்று அழைக்கப்படும் பறவை 400 கி.மீ வரை தரையிறங்காமல் பறக்கும் இயல்புடையது.
2. ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப் புலவர் “நாராய், நாராய், செங்கால், நாராய்” என்னும் பாடலை எழுதியுள்ளார்.
3. பெண் சிட்டுக்குருவியின் உடல் முழுவதும் அடர் பழுப்பாக இருக்கும்.
27. திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற கருத்து யாருடைய பாடலில் கூறப்பட்டுள்ளது?
28. கீழ்க்காணும் தாவர இலைகளின் பெயரில் அமைந்த பொருத்தமானவையைத் தேர்க.
1. வரகு - தாள்
2. அரசு - இலை
3. சப்பாத்திக்கள்ளி - தழை
4. நாணல் - புல்
29. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. டாக்டர் சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.
2. அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலுக்கு இட்ட பெயர் - சிட்டுக்குருவியின் வளர்ச்சி.
30. கடல்நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்னும் அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்ட நூல் எது?
1. முல்லைப்பாட்டு, 2. பரிபாடல், 3. திருக்குறள், 4. கார்நாற்பது, 5. திருப்பாவை.
31. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்.
2. பாவலரேறு பெருஞ்சித்திரனார் கனிச்சாறு, கொய்யாக்கனி, காவியப்பாவை, நூறாசிரியம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
3. தேன்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்.
32. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. பஞ்ச பூதங்களால் ஆனது இவ்வுலகம் என்பதை தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
2. ‘கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி’ - களவழி நாற்பது.
3. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - கபிலர்.
4. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்னும் அறிவியல் உண்மையை நிறுவியவர் - கலிலியோ.
33. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. எகர வரிசையில் ‘கெ’ முதல் ‘னெ’ முடிய எந்த உயிர் மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.
2. ஒகர வரிசையில் ‘நொ’ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.
34. கீழ்க்கண்ட எந்த உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
35. கீழ்க்கண்ட கூற்றுகளைக் காண்க.
1. சென்னை மெரினா கடற்கரையில் காமராசருக்கு சிலை நிறுவப்பட்டது.
2. கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
36. பொருத்துக. (A. தமிழ்நூல்கள், B. பிரெய்லி நூல்கள், C. குழந்தைகள் பிரிவு, D. கணிதம், அறிவியல், மருத்துவம் - தளம் வாரியாக)
37. “மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது - தன் மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது” என்று பாடியவர் யார்?
38. கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானதைத் தேர்க.
39. இந்திய நூலக அறிவியலின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
40. 1.‘தமிழ்' என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது. 2.‘தமிழ்நாடு’ என்ற சொல் முதன் முதலில் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது.
41. பொருத்துக. (a. ஆழிப்பெருக்கு, b. மேதினி, c. ஊழி, d. உள்ளப்பூட்டு)
42. மேதகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களால் தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என பாராட்டப் பெற்றவர் யார்?
43. பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து தவறான கூற்றுகளை தேர்வு செய்க.
1. எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் கொண்டே அவற்றை குறில் நெடில் என்று வகைப்படுத்துகிறோம்.
2. குறில் எழுத்து ஒலிக்கும் கால அளவு அரை மாத்திரை.
3. நெடில் எழுத்து ஒலிக்கும் கால அளவு ஒரு மாத்திரை.
4. இங்கு மாத்திரை என்பது கால அளவினைக் குறிக்கிறது.
44. எந்த நூலில், இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை எனும் வகையில் சிறந்து விளங்குகிறது?
45. கூற்று 1: பறவைகள் பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் வலசை செல்கின்றன.
கூற்று 2: வலசை போவதால் ஒரு சில பறவைகள் வேறு வகை பறவைகளாக தோன்றுமளவிற்கு மாற்றம் ஏற்படுகின்றன.
46. புதிய ஆத்திச்சூடி என்று காலத்திற்கேற்ற அறிவுரைகளை கூறியவர் யார்?
47. மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எவை?
1. உயிரெழுத்து, 2. மெய்யெழுத்து, 3. உயிர்மெய்யெழுத்து, 4. ஆயுதஎழுத்து.
48. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் - இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்?
49. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு விடுபட்டதை நிரப்புக.
50. ’மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' என்று பாடிய புலவர் யார்?

📊 Your Final Score

0 / 50

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments