TNPSC & TET Tamil Model Test 24 (25 Questions) | 100 Free Test Series by TAF IAS Academy

 


📚 தமிழ் மாதிரித் தேர்வு - 24

TNPSC & TET - 100 Free Online Test Series
பாடம்: 10-ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் - இயல் - 07
⚠️ Disclaimer & Credits: The entire collection of questions in this practice test has been meticulously prepared and originally conducted by TAF IAS Academy. All credits and rights for the content belong entirely to them.
1. தவறான இணை எது?
2. 'குரலினும் யாழினும் குரல் முதல் ஏழும்' - என்ற சிலப்பதிகார அடியில் கூறும் ஏழு இசைகளுள் சரியானது எது?
1. குரல், 2. இளி, 3. துத்தம், 4. தாளம், 5. விளரி
3. சரியற்ற கூற்றைத் தேர்ந்தெடுக்க.
1. சிலப்பதிகாரத்தின் ஆசிரியரான இளங்கோவடிகள் சோழ மரபைச் சேர்ந்தவராவர்.
2. மணிமேகலையும், சிலப்பதிகாரமும் ஒன்றுடன் ஒன்று கதைத் தொடர்பு கொண்டிருப்பதால் இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப்படுகின்றன.
3. 'அடிகள் நீரே அருளுக' என்ற கூற்றைக் கூறியவர் மணிமேகலையின் ஆசிரியர் ஆவார்.
4. கோவலன் கண்ணகி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதால் சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் என்றும் அழைக்கப்படுகிறது.
4. பொருத்துக (ராஜம் கிருஷ்ணனின் நுால்கள்)
a. கரிப்பு மணிகள் - 1. படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்கள்
b. குறிஞ்சித் தேன் - 2. பெண்சிசுக் கொலைக்கான காரணங்கள்
c. அலைவாய்க் கரையில் - 3. தீப்பெட்டித் தொழிற்சாலை குழந்தை பற்றி பேசுவது
d. கூட்டுக் குஞ்சுகள் - 4. உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கை
e. மண்ணகத்து பூந்துளிகள் - 5. மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பேசுவது
5. கீழ்க்காணும் கூற்றுக்கான சரியான விடை தருக.
1. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது பெற்றவர்.
2. தமிழக அரசின் ஔவை விருதைப் பெற்றுள்ளார்.
3. துார்தர்ஷனின் பொதிகை விருதையும் பெற்றுள்ளார்.
4. 2019ல் தாமரைத்திரு விருதினை பெற்றவர்.
6. தன் கோட்டையைக் காக்க கோட்டையின் உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு போரிடுவதை கூறும் புறத்தினை எது?
7. ஐம்பெருங்காப்பியங்களை முறையாக வைத்த நுால் எது?
8. மெய்க்கீர்த்திகள் எந்த மன்னரின் காலந்தொட்டு கல்லில் வடிக்கப்பட்டு வருகிறது?
9. சரியான கூற்று எது?
1. அரசர்கள் தங்களின் வரலாறையும் பெருமையையும் காலம் கடந்து மக்கள் அறிய வேண்டி சிலாசாசனங்களாக செதுக்கினார்.
2. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து நுாலின் இறுதியிலுள்ள பதிகங்கள் கல்வெட்டிற்கு முன்னோடியாகும்
3. பல்லவர் கல்வெட்டுகளிலும் பாண்டியர் செப்பேடுகளிலும் இவ்வழக்கம் தோன்றியது.
10. மா.பொ.சி அவர்கள் 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்ற நுாலுக்காக எந்த ஆண்டுப் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
11. கோப்பரகேசரி திரிபுவனச் சக்கரவர்த்தி என்று பட்டங்கள் பெற்ற சோழன் மன்னன் யார்?
12. பொருத்துக.
a) என் கதை - 1) ராஜம் கிருஷ்ணன்
b) வேருக்கு நீர் - 2) ந.முத்துசாமி
c) நாற்காலிக்காரர் - 3) வெ.ராமலிங்கனார்
13. இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குச் கேடில்லாத வகையில் தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக் கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென மா.பொ.சி எந்த இலக்கியத்தைக் குறிப்பிடுகிறார்?
14. தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கட மலையாகவும் தெற்கெல்லை குமரி முனையாகவும் இருந்ததாக எந்த நுால்கள் கூறுகின்றன?
15. தவறான இணை எது?
16. சரியற்ற கூற்று எது?
1. ஏர் புதிதா? எனும் கவிதை கு.ப.ரா. படைப்புகள் எனும் நுாலில் இடம் பெற்றுள்ளது.
2. கு.ப.ராஜகோபாலன் பாரததேவி, கிராம ஊழியன், பாரதமணி ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
3. இவரின் மறைவுக்கு பின்னர் இவரது படைப்புகள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன பெயர்களில் நுால்களாகத் தொகுக்கப்பட்டன.
17. சரியான கூற்று எது? (எம்.எஸ்.சுப்புலட்சுமி)
1. 1954 -ல் தாமரையணி (பத்மபூஷன்) விருதைப் பெற்றுள்ளார்.
2. 1974-ல் நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருதினைப் பெற்ற முதல் இசைக் கலைஞராவார்.
3. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றுள்ளார்.
18. சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கு இடையிலான வணிக ஒப்பந்தத்தை பற்றி கூறும் கையெழுத்து சுவடி எங்கு கிடைத்துள்ளது?
19. வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் பொன்னேர் பூட்டுதல் என்ற விழா எப்போது நடைபெறும் என கு.ப.ரா. கூறுகிறார்?
20. மார்ஷல் ஏ.நேசமணி பற்றிய கூற்றில் சரி எது?
1. நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
2. இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையும் மணிமண்டபமும் அமைந்துள்ளது.
21. பயில்தொழில் - இலக்கண குறிப்பு தருக.
22. பட்டினும் மயிரினும் பருத்தி நுாலினும் தொடை விகற்பத்தைக் கூறுக?
23. பொருத்துக.
a) காஞ்சித் திணை - 1) ஒருதலைக் காமம்
b) கரந்தைத் திணை - 2) ஆநிரை மீட்டல்
c) பெருந்திணை - 3) மாற்றரசனோடு எதிர்த்து போரிடல்
d) கைக்கிளை - 4) பொருந்தாக் காமம்
24. 17-ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, சுவரோவியங்கள் எந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன?
25. கூற்று : சிலப்பதிகாரத்தை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் கூறலாம்.
காரணம் : சிலப்பதிகாரத்தின் செய்யுள் அடிகள் உரைநடைப் பாங்கில் அமைந்திருக்கும்.

📊 Your Final Score

0 / 25

Please scroll up to see the correct answers highlighted in Green.

Post a Comment

0 Comments